பக்கம் எண் :
 
யாப்பதிகாரம்494முத்துவீரியம்

ஊசல்

1122. அகவல் விருத்தத் தானா குதல்கலித்
     தாழிசை யானா னாகுதல் சுற்றத்
     தோடும் பொலிக வாடீ ரூசல்
     ஆடா மோவூச லூச லாகும்.

என்பது, ஆசிரிய விருத்தத்தானாதல், கலித்தாழிசை யானாதல், சுற்றத்தோடும்
பொலிவதாக, ஆடீருசல் ஆடாமோ வூசல் என்றிறக் கூறுவது ஊசலாகும். (161)

எழுகூற்றிருக்கை

1123. கோதி லேழறை யாக்கிக் குறுமக்கண்
     முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும்
     பெற்றி யால்வழு வாமை யொன்று
     முதலாக வேழீ றாய்முறை யானே
     இயம்புவ தெழுகூற் றிருக்கை யாகும்.

என்பது, கோதிலேழறை யாக்கிக், குறுமக்கள் முன்னின்றும் புக்கும் போந்தும்
விளையாடும் பெற்றியால் வழுவாமை, ஒன்று முதலேழிறுதியாக முறையானே பாடுவது
எழுகூற்றிருக்கையாகும். (162)

கடிகை வெண்பா

1124. அமர ரிடத்து மரச ரிடத்து
     நடக்குங் காரிய நாழிகை யளவிற்
     றோன்றி யொழுகுவ தாகமுப் பானோ
     டிரண்டு நேரிசை வெண்பா வியம்பல்
     கடிகைவெண் பாவெனக் கருதினர் புலவர்.

என்பது, தேவரிடத்தும், அரசரிடத்தும் நிகழுங்காரியம், கடிகையளவிற் றோன்றி
நடப்பதாக, முப்பத்திரண்டு நேரிசை வெண்பாவாற் கூறுவது கடிகை வெண்பாவாகும். (163)

சின்னப்பூ

1125. நேரிசை வெண்பா வாலே நிருபன்
      சின்னமாந் தசாங்கத் தினைச்சிறப் பித்து