யாப்பதிகாரம் | 495 | முத்துவீரியம் |
விரித்தைம்
பதுதொண் ணூறெழு
பதுமுப்
பதுநூ றெனுமெண் படவெடுத் துரைப்பது
சின்னப் பூவெனச் செப்பினர்
புலவர்.
என்பது, நேரிசை வெண்பாவால்,
அரசனது சின்னமாகிய தசாங்கத்தைச் சிறப்பித்து,
நூறு தொண்ணூறு எழுபது ஐம்பது முப்பது என்னும் தொகைபடக்
கூறுவது
சின்னப்பூவாகும். (164)
விருத்தம்
1126. வில்வா ளொடுவேல்
செங்கோல் யானை
குதிரை நாடூர் குடையிவ் வொன்பதும்
பப்பத் தகவல் விருத்தத் தாலே
ஒன்பது வகையுற வுரைப்பது விருத்த
விலக்கண மென்மனா ரியல்புணர்ந்
தோரே.
என்பது, வில் வாள் வேல்
செங்கோல் யானை குதிரை நாடு ஊர் குடை
இவ்வொன்பதையும் பத்துப்பத்து
அகவல்விருத்தத்தால் ஒன்பது வகையுறப் பாடுவது
விருத்த விலக்கணமாகும். (165)
முதுகாஞ்சி
1127. இளமைகழிந் தறிவு மிக்கோ
ரிளைமை
கழியாத வறிவின் மாக்க
டமக்கு
மொழியப் படுவது முதுகாஞ்சி யாகும்.
என்பது, இளமைகழிந்து
அறிவின்மிக்கோர், இளமை கழியாத அறிவின்
மாக்கட்குக்
கூறுவது முதுகாஞ்சியாகும். (166)
இயன்மொழி வாழ்த்து
1128. இக்குடி பிறந்தோர்க் கெல்லா
மிக்குணம்
இயல்பென் றுநீயு மவற்றை யுடையை
என்று மின்னோர் போனீயு
மியல்பாக
ஈயென்று முயர்ந்தோ ரெடுத்துமற்
றவனை
|