பக்கம் எண் :
 
யாப்பதிகாரம்496முத்துவீரியம்

      வாழ்த்துவ தாக வழுத்தலி யன்மொழி
      வாழ்த்தா மென்ன வழுத்தினர் புலவர்.

என்பது, இக்குடியிற் பிறந்தோர்க்கெல்லாம் இக்குணமியல் பென்றும், அவற்றை
நீயும் இயல்பாகவுடையை யென்றும், இன்னோர் போல நீயும் இயல்பாக ஈயென்றும்,
உயர்ந்தோரவனை வாழ்த்துவதாகக் கூறுவதும் இயன்மொழி வாழ்த்தாகும். (167)

ஒழிபியல் முற்றும்.

யாப்பிலக்கணம் முற்றும்

-------