பக்கம் எண் :
 
அணியதிகாரம்505முத்துவீரியம்

குறையென வண்டர் வேண்டவே
மறைநுவல் கங்கை தாங்கினார்.

முதலடி கடையடி மடக்கு.

கொல்லியம் பொருப்பனை மேவார் கோநகர்
இல்லெரி மேவுவ தியம்ப வேண்டுமோ
வல்லியந் தாமரை வனங்க ளாயின
வல்லியந் தாமரை வனங்க ளாயின.

இறுதி இரண்டடி மடக்கு.

வரிய வாங்குழன் மாதரி ளங்கொடி
அரிய வாங்கய தானவ னங்களே
அரிய வாங்கய தானவ னங்களே
அரிய வாங்கய தானவ னங்களே.

முதலடி தவிர மற்றைய மூன்றடி மடக்கு.

காமரம் பயினீர மதுகரங்
காமரம் பயினீர மதுகரங்
காமரம் பயினீர மதுகரம்
நாம ரந்தையுறனினை யார்நமர்.

கடையடி தவிர மற்றைய மூன்றடி மடக்கு.

வெண்ணி லாவிரி சோதி விளங்கிழை
வெண்ணி லாவிரி சோதி விளங்கிழை
உண்ணிலாவுயி ருய்குவ தெங்ஙனம்
வெண்ணி லாவிரி சோதி விளங்கிழை.

மூன்றாமடி தவிர மற்றைய மூன்றடி மடக்கு.

புன்னை யம்பொழில் சூழ்தரு கானலே
மன்னர் வந்துநம் வான்றுயர் தீர்க்கலர்
புன்னை யம்பொழில் சூழ்தரு கானலே
புன்னை யம்பொழில் சூழ்தரு கானலே.

இரண்டாமடி தவிர மற்றைய மூன்றடி மடக்கு.

கழுநீர் கண்ணாறும்
கழுநீர் கண்ணாறும்
கழுநீர் கண்ணாறும்
கழுநீர் கண்ணாறும். (11)

நான்கடி மடக்கு.