அணியதிகாரம் | 510 | முத்துவீரியம் |
(வ-று.)
சீலத்தான் ஞானத்தாற்
றேற்றத்தாற் சென்றகன்ற
காலத்தா லாராத காதலான்-ஞாலத்தார்
இச்சிக்கச் சாலச் சிறந்தடியேற் கேயினிதாங்
கச்சிக்கச் சாலைக் கனி. (19)
மாத்திரைச் சுருக்கவணி
1148. ஒருபொரு டருஞ்சொலோர்
மாத்திரை குறைய
மற்றொரு பொருடரன் மாத்திரைச்
சுருக்கம்.
என்பது, ஒருபொருளைத்
தருஞ்சொல், ஒருமாத்திரை குறைய, வேறொரு
பொருளைத் தருவது மாத்திரைச் சுருக்கவணியாம்.
(வ-று.)
நேரிழையார் கூந்தலிலோர்
புள்ளிபெற நீண்மரமாம்
நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாஞ்-சீரிய
காட்டொன் றொழிப்பவிசை யாகு மதனுள்ளு
மீட்டொன் றொழிப்ப மிடறு.
இதனுள், ஓதி, *ஓதி (ஒதி)
ஏரி, *ஏரி (எரி) காந்தாரம், கந்தாரம், கந்தரம்.
(20)
மாத்திரை வருத்தனம்
1149. மாத்திரைச் சுருக்க மறுதலைப்
படவொரு
மாத்திரை யேற்றிடின் மாத்திரை
வருத்தனம்.
என்பது, மாத்திரைச் சுருக்க
மாறுபடவொரு மாத்திரையேற்றினால் மாத்திரை
வருத்தனம்.
(வ-று.)
நீண்மரத்தி லொன்றேற
நேரிழையார் கூந்தலாம்
பூநெருப்பி லொன்றேறப் பூங்குளமாம்-பேணுங்
கழுத்திலொன் றேறவிசை காணுமிசை யெல்லாம்
எழுத்திலொன் றேறவெழு நாடு.
இதனுள்
ஒதி-ஓதி-எரி-ஏரி-கந்தரம்-கந்தாரம். (21)
* முற்காலத்தில்
எகர ஒகரங்கள் இப்போதைய வடிவிலில்லாமல்
ஏ, ஓ, - என இவ்வாறு அமைந்திருந்தன.
|