பக்கம் எண் :
 
அணியதிகாரம்511முத்துவீரியம்

திரிபங்கியணி

1150. ஒருகவிக் குட்கவி மூன்றொழு குவது
     திரிபங்கி யென்மனார் தெளிந்திசி னோரே.

என்பது, ஒரு செய்யுளில் மூன்று செய்யுள் வருவது திரிபங்கியணி.

(வ-று.)

ஆதரந் தீரன்னை போலினியா யம்பி காபதியே
மாதுபங் காவன்னி சேர்சடை யாய்வம்பு நீண்முடியாய்
ஏதமுய்ந் தாரின்னல் சூழ்வினை தீரெம்பி ரானினியார்
ஓதுமொன் றேயுன்னு வாரமு தேயும்பர் நாயகனே.

ஆதரந்தீர்
மாதுபங்கா
ஏதமுய்ந்தார்
ஓதுமொன்றே. (1)

அன்னைபோலினியாய்
வன்னிசேர் சடையாய்
இன்னல்சூழ் வினைதீர்
உன்னுவா ரமுதே. (2)

அம்பிகாபதியே
வம்புநீண்முடியாய்
எம்பிரானினியா
ரூம்பர்நாயகனே. (3) (22)

திரிபாகியணி

1151. மூன்றெழுத் தொருபெயர் முதலிடை முரிபகின்
     முப்பெய ரெதிர்முளைப் பதுதிரி பாகி.

என்பது, மூன்றெழுத்தானாகிய ஒருசொல்லை முதலெழுத்தை நீக்க, ஒரு சொல்லும்,
நடுவெழுத்தை நீக்க மற்றொரு சொல்லுமாக மூன்று சொற்றோன்றுவது திரிபாகியணி.

(வ-று.)

மூன்றெழுத்து மெங்கோ முதலீ றொருவள்ளல்
ஏன்றுலகங் காப்ப திடைகடை-யான்றுரைப்பிற்
பூமாரி பெய்துலகம் போற்றிப் புகழ்ந்தேத்துங்
காமாரி காரிமா ரி. (23)