பக்கம் எண் :
 
அணியதிகாரம்512முத்துவீரியம்

ஒற்றுப் பெயர்த்தலணி

1152. ஒருமொழி தொடர்மொழி யாகவொண் பொருள்படும்
     அவற்றை யப்பொரு டவிர மறுபொருள்
     பெறச்சொல லொற்றுப் பெயர்த்த லாகும்.

என்பது, ஒருமொழி யாகவும், தொடர்மொழி யாகவும் பொருள்படு மவற்றை,
அப்பொருடவிர வேறுபொருள்படக் கூறுவது ஒற்றுப் பெயர்த்தலணி.

(வ-று.)

வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து
மண்குளிரச் சாயல் வளர்க்குமாந்-தண்கவிகைக்
கொங்கா ரலங்க லனபாயன் கொய்பொழில்சூழ்
கங்கா புரமா ளிகை.

இதனுள், கங்காபுரமாளிகை - நிழலைப் பெருக்கும்,
கங்காபுரமாளும்-அனபாயன்கை-காவல் புரியும். (24)

பிறிதுபடு பாட்டு

1153. பாவடி தொடைகளும் படுப்ப வேறு
     மேவருஞ் சொற்பொருள் வேறுப டாமன்
     மற்றொரு பாவாய் வருவது பிறிது
     படுபாட் டெனப்பெயர் பகரப் படுமே.

என்பது, ஒருபாவினடிகளும், தொடைகளும் வேறுபடுப்பச், சொல்லும், பொருளும்
வேறுபடாது, வேறொரு செய்யுளாய் வருவது பிறிதுபடு பாட்டணி.

(வ-று.)

தெரிவருங் காதலிற் சேர்ந்தோர் விழையும் பரிசுகொண்டு
வரியளி பாட மருவரு வல்லி யிடையுடைத்தாய்த்
திரிதருங் காமர் மயிலிய லாயநண் ணாத்தேமொழி
அரிவைதன் னேரேன லாகுமெம் மையயா மாடிடமே.

தெரிவருங் காதலிற் சேர்ந்தோர் விழையும்
பரிசு கொண்டு வரியளி பாட
மருவரு வல்லி யிடையுடைத் தாய்த்திரி
தருங்காமர் மயிலிய லாய நண்ணாத்
தேமொழி யரிவைதன் னேரென
லாகுமெம் மைய யாமா டிடமே. (25)

சொல்லணி முற்றும்.