அணியதிகாரம் | 516 | முத்துவீரியம் |
(வ-று.)
அன்னைபோ லெவ்வுயிருந்
தாங்கு மனபாயா
நின்னையா ரொப்பர் நிலவேந்தர்-அன்னதே
வாரி புடைசூழ்ந்த வையகத்திற் கில்லையாற்
சூரியனே போலுஞ் சுடர். (தண்டி-மேற்)
(8)
புகழுவமை
1162. உவமையைப் புகழ்ந்துவ மிப்பது
புகழே.
என்பது, உமைப் பொருளைப்
புகழ்ந்துகூறி உவமேயப் பொருளை வியப்பது
புகழுவமை.
(வ-று.)
இறையோன் சடைமுடிமே லெந்நாளுந்
தங்கும்
பிறையேர் திருநுதலும் பெற்ற-தறைகடல்சூழ்
பூவலயந் தாங்கு மரவின் படம்புரையும்
பாவைநின் னல்குற் பரப்பு.
(தண்டி-மேற்) (9)
நிந்தையுவமை
1163. உவமையைப் பழித்துவ மிப்பது
நிந்தை.
என்பது, உவமைப்பொருளை
நிந்தித்து உவமேயப்பொருளை வியப்பது
நிந்தையுவமை.
(வ-று.)
மறுப்பயின்ற வாண்மதியு
மம்மதிக்குத் தோற்கு
நிறத்தலரு நேரொக்கு மேனுஞ்-சிறப்புடைத்துத்
தில்லைப் பெருமா னருள்போற்
றிருமேனி
முல்லைப்பூங் கோதை முகம். (தண்டி-மேற்) (10)
நியமவுவமை
1164. இதற்கிஃ தேயுவம மென்பது
நியமம்.
என்பது, இந்தப் பொருளுக்கு
இப்பொருளேயுவமை யென்று கூறல் நியமவுவமை.
(வ-று.)
தாதொன்று தாமரையே நின்முக
மொப்பதுமற்
றியாதொன்று மொவ்வா
திளங்கொடியே-மீதுயர்த்த
|