பக்கம் எண் :
 
அணியதிகாரம்548முத்துவீரியம்

வளைபட்ட தார்க்கழல்கண் மாறெதிர்ந்த தெவ்வர்
தளைபட்ட தாட்டா மரை. (தண்டி-மேற்)

சாதிக்குறை விசேடம்:

மேய நிரைபுரந்து வெண்ணெய் தொடுவுண்ட
ஆயனார் மாறேற் றமர்புரியத்-தூய
பெருந்திருவும் பின்னுங் கொடுத்துடைந்தார் விண்மேற்
புரந்தரனும் வானோரும் போய். (தண்டி-மேற்)

பொருட்குறை விசேடம்:

தொல்லை மறைதேர் துணைவன்பால் யாண்டுவரை
எல்லை யிருநாழி நெற்கொண்டோர்-மெல்லியலாள்
ஓங்குலகில் வாழு முயிரனைத்து மூட்டுமால்
ஏங்கொலிநீர்க் காஞ்சி யிடை. (தண்டி-மேற்)

உறுப்புக்குறை விசேடம்:

யானை யிரதம் பரியா ளிவையில்லைத்
தானு மனங்கன் றனுக்கரும்பு-தேனார்
மலரைந்தால் வென்று அடிப்படுத்தான் மாரன்
உலகங்கண் மூன்று மொருங்கு. (தண்டி-மேற்) (95)

ஒப்புமைக் கூட்டவணி

1249. ஒருபொரு ளுரைக்குங் காலகத் தெண்ணிப்
      பொருண்முத லானவை யவற்றின் மிகுபொருள்
      உறவைத் தியம்புவ தொப்புமைக் கூட்டம்.

என்பது, ஒருபொருளைக் கூறுமிடத்து இதயக்கட் கருதியவற்றின் மிகுந்த
பொருளைப் பொருந்த வெடுத்துக்கூறல் ஒப்புமைக் கூட்டவணி. (96)

அதன் வகை

1250. புகழினும் பழிப்பினும் புலப்படு மதுவே.

என்பது, அவ்வொப்புமைக் கூட்டம் புகழ்தற்கண்ணும் பழித்தற்கண்ணும் தோன்றும்.

(வ-று.)

புகழொப்புமை:

பூண்டாங்கு கொங்கை பொரவே குழைபொருப்புந்
தூண்டாத தெய்வச் சுடர்விளக்கு-நாண்டாங்கும்