அணியதிகாரம் | 549 | முத்துவீரியம் |
வண்மைசால் காஞ்சி வளம்பதியு
மெந்நாளும்
உண்மையா னுண்டிவ் வுலகு. (தண்டி-மேற்)
பழிப்பொப்புமைக் கூட்டம்:
கொள்பொருள் வெஃகிக்
குடியலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர்
வல்லே மழையறுக்குங் கோள்.
(தண்டி-மேற்) (97)
விரோதவணி
1251. முரணப் படும்பொரு ளொடுமொழி
யானும்
முரணப் படுமியல் பாக்கமுற்
றோன்றல்
விரோத மெனப்பெயர் வேண்டப்
படுமே.
என்பது, மாறுபட்டபொருளானுஞ்
சொல்லானு மாறுபடுந் தன்மை விளைவு முன்னர்த்
தோன்றல் விரோதவணி.
(வ-று.)
சோலை பயிலுங்
குயின்மழலை சோர்ந்தடங்க
ஆலு மயிற்கணங்க ளார்த்தெழுந்த-ஞாலங்
குளிர்ந்த முகில்கறுத்த கோபஞ் சிவந்த
விளர்ந்த துணைப்பிரிந்தார் மெய். (தண்டி-மேற்) (98)
மாறுபடு புகழ்நிலையணி
1252. கவிகரு தியபொருள்
கரந்து மற்றதனை
நிந்திப்ப தற்குமற்
றொன்றனை நினைத்துப்
புகழ்வது மாறு படுபுகழ் நிலையே.
என்பது, செய்யுளெண்ணிய பொருளை
மறைத்து அப்பொருளை நிந்திப்பதற்கு
வேறொரு
பொருளைப் புகழ்வது மாறுபடு புகழ்நிலை.
(வ-று.)
இரவறியா யாவரையும்
பின்செல்லா நல்ல
தருநிழலுந் தண்ணீரும்
புல்லு-மொருவர்
படைத்தனவுங் கொள்ளாவிப்
புள்ளிமான் பார்மேற்
றுடைத்தனவே யன்றோ துயர்.
(தண்டி-மேற்) (99)
|