பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்55முத்துவீரியம்

(வி-ரை.)

‘‘உயிரீ யாகிய முன்னிலைக் கிளவியும்
புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்
இயல்பா குநவும் உறழ்பா குநவுமென்று
ஆயீ ரியல வல்லெழுத்து வரினே’’ (தொல் - தொகை - 9)

என்னும் தொல்காப்பியர் கூற்றைத் தழுவியது இந்நூற்பா. (28)

ண, ன, முன் ஞ, ய

188. ண, ன முனர் வருஞய வொருவினை கொள்ளும்.

(இ-ள்.) ண, னக்களுக்கு முன்வரும் ஞ, ய க்களொரு வினையைக்கொண்டு முடியும்.

(வ-று.) மண்யாத்த கோட்டமழகளிறு - மண்ஞாத்தகோட்ட. பொன்யாத்ததார்
புரவிபரிக்குமே. பொன்ஞாத்ததார் புரவி எனவரும்.

(வி-ரை.) ணகர னகரத்தின் முன் யகரம் நிற்க வேண்டுமிடத்து ஞகரம் நிற்பினும்
ஒக்கும் என்பது இதன் கருத்தாகும். ஒரு வினையைக் கொண்டு முடியும் வினைச் சொற்கள்
முதல் எழுத்தாதற்கு ஒரு தன்மையவாம் என்பது கருத்தாகும். இங்ஙனம் வருதலே ‘போலி’
என்றும் இதனை இறந்தது விலக்கலால் நன்னூலார் கூறிற்றிலர் என்றும் கூறுவர் சங்கர
நமச்சிவாயர் (நன் - எழுத் - 124 உரை காண்க)

‘‘ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும்
வினையோ ரனைய என்மனார் புலவர்’’ (தொகை - 4)

என்பர் தொல்காப்பியரும். (29)

ண, ன முன் முதலாகெழுத்துக்கள்

189. அல்வழி யிவ்விரு மையுமுத லாகெழுத்
     தெல்லா முன்வரி னியல்பா கும்மே.

(இ-ள்.) அல்வழிக்கண் ண, னக்களை யீறாகிய சொற்களுக்கு முன் மொழிக்கு
முதலாகிய வெழுத்துக்களையுடைய சொற்கள் வரி னியல்பாம்.

(வ-று.) பொன், மண், அரிது, குடம், ஞமலி, வலிது, பொன் னரிது, மண்ணரிது,
பொன்குடம், மண்குடம். (30)

ண, ன, முன் மென்மையும் இடைமையும்

190. வல்லெழுத் தல்வழி யியல்பாம் வேற்றுமை.