பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்56முத்துவீரியம்

(இ-ள்.) வேற்றுமைக்கண் வல்லெழுத்தை முதலாகவுடைய சொற்களல்லாத
வெழுத்துக்களையுடைய சொற்களுக்கு முன், ண, னக்களை இறுதியாகிய சொற்களியல்பாம்.

(வ-று.) மண், பொன், வலிது, நீட்சி, யாப்பு. (31)

ண ள; ன, ல என்பவற்றின் முன் த, ந

191. ண, ள, ட, ணவாம் ன, ல, றனவாந்த நவரின்.

(இ-ள்.) ண, ள க்களுக்குமுன் த, நக்கள்வரின் ட, ணக்களாம். ன, லக்களுக்குமுன் த,
நக்கள்வரின் ற, னக்களாம்.

(வ-று.) மண் + தீது, = மண்டீது, தெள் + நலம் = தெண்ணலம், பொன் + தீது =
பொன்றீது, கல் + நலம் = கன்னலம், வாள் + தீது = வாடீது. வாள் + நன்மை = வாணன்மை,
வேல் + தீது = வேறீது. வேல் + நன்மை = வேனன்மை.

(வி-ரை.)

‘‘னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகும் தநக்கள் ஆயுங் காலே’’ (மெய்யீற் - 34)

என்பர் நன்னூலாரும். (32)

ஒள, ஞ, ந, ம, வ என்பவற்றின் முன் முற்றுகரம்

192. ஒளவிறு ஞ, ந, ம, வ விறுதியு முகர
     முற்றுகர முன்னிலை யுறழ்தலும் விதியாகும்.

(இ-ள்.) ஒளவீறும் ஞ, ந, ம, வவீறும், முற்றுகர முன்னிலையாயி னுகரச்சாரியை
பெற்று ஒருகால் இயல்பும் ஒருகால் மிகலுமாம்.

(வ-று.) கௌவுகொற்றா - கௌவுக்கொற்றா; உரிஞுகொற்றா -உரிஞுக்கொற்றா;
பொருநுகொற்றா - பொருநுக்கொற்றா; திருமுகொற்றா - திருமுக்கொற்றா;
தெவ்வுகொற்றா-தெவ்வுக்கொற்றா எனவரும். (33)

உயர்திணைப்பெயர் முன் நாற்கணம்

193. இருவழி யினுமுட லுயிரையு மிறுதியாம்
     உயர்திணை முனரெலா முறவியல் பாகும்.

(இ-ள்.) அல்வழிவேற்றுமை யிரண்டிடத்து மெய்யையும் உயிரையு மிறுதியாகிய
வுயர்திணைப் பெயர்க்குமுன் வன்கண