பக்கம் எண் :
 
அணியதிகாரம்551முத்துவீரியம்

பரிவருத்தனையணி

1256. ஒன்றற் கொருபொருள் கொடுத்தொரு பொருளை
      வாங்கல் பரிவருத் தனமா கும்மே.

என்பது, ஒரு பொருளுக்கு ஒரு பொருளைக் கொடுத்து வேறொரு பொருளைப்
பெறுவது பரிவருத்தனவணி.

(வ-று.)

காமனை வென்றோன் சடைமதியுங் கங்கையுந்
தாமநிழ லோரொன்று தாங்கொடுத்து-நாமப்
பருவா ளரவின் பணமணிக டோறு
முருவா யிரம்பெற் றது. (தண்டி-மேற்) (103)

வாழ்த்தணி

1257. வாழ்த்தி யுரைப்பது வாழ்த்தெனப் படுமே.
      என்பது, வாழ்த்திக்கூறல் வாழ்த்தணி.

(வ-று.)

மூவாத் தமிழாய்ந்த முன்னூன் முனிவாழி
ஆவாழி வாழி யருமறையோர்-காவிரிநாட்
டண்ண லனபாயன் வாழி யவன்குடைக்கீழ்
மண்ணுலகில் வாழி மழை. (தண்டி-மேற்) (104)

பொருளணி முற்றும்.

------

3. செய்யுளணியியல்

செய்யுள் வகை

1258. தொகைநிலை குளகமுத் தகந்தொடர் நிலையெனச்
      செய்யுணால் வகைப்படுஞ் செப்புங் காலே.

என்பது, செய்யுள் தொகைநிலைச் செய்யுள், குளகச் செய்யுள், முத்தகச் செய்யுள்,
தொடர்நிலைச் செய்யுள் என நான்கு வகைப்படும். (1)

தொகைநிலைச் செய்யுள்

1259. அவற்றுள்,
      தொகைநிலை பலராற் சொல்லப் பட்டுப்
      பலபாட் டாக வருநவு மொருவராற்