பக்கம் எண் :
 
சுவாமிநாதம்102சொல்லதிகாரம்
 

ஒர் முதனிலை, ஒருபொருட்குப் பல முதனிலை ஆக இவ்வாறெல்லாம் வரும்.

விளக்கம் :

     நட           வினையடியாகப்பிறந்தது
     நகை          பெயரடியாகப்பிறந்தது
     போல்         இடையடியாகப்பிறந்தது
     சிவ           உரியடியாகப்பிறந்தது
     ஈறு< இறு      முதனிலை
     இறுதல்        தொழிற்பெயர்
     இறும்         வினைமுற்று
     இற்ற          பெயரெச்சம்
     இற்று          வினையெச்சம்

தனிவினை என்பது விகுதி எதுவும் சேராதது. தொடர்வினை என்பது
பகுதியோடு விகுதி முதலியன சேர்ந்தது.

     ‘அறிகொன்று அறியான்’ (குறள்) என்பதில் அறி என்பதில் முதனிலை
தானே தொழிற்பெயராய் நின்றது.

     ‘பெறுவது கொள்வாரும் நேர்’ என்பதில் நேர் என்ற முதனிலை
வினைமுற்றாக வந்தது.

     ‘பொருபடை’ என்பதில் பொரு, பெயரெச்சம் (எல்லா
வினைத்தொகையிலும் முதனிலை, பெயரெச்சமாக இருக்கும்).

     ‘வரிபுனைபந்து’ என்பதில் வரி வினையெச்சம். ‘கால காலனைக்
காண்கின்ற போது’ - முதனிலை பிரிந்து தொழிற்பெயராய் வினைமுதலானது.

உருபேற்றல் :

     இவ்வுரை பெருகிற்று     - 1-ஆம் வேற்றுமை
     சொல்லைச் சேர்த்தான்   - 2-ஆம் வேற்றுமை