காலம், கருவி, தொழில், செயப்படுபொருள், இன்னதற்கு இது பயன் என்றுள பொருத்தம் ஆகிய உடையவாய்ப் பொருள் முடிவு தரும். விளக்கம் : செய்யும் (செய்+உம்): பாடுக (பாடு+க) - விகுதி; பொருந்தியது. செய்தான் (செய்+த்+ஆன்)-இடைநிலையும் விகுதியும் பொருந்தியது. செய்தனன் (செய்+த்+அன்+அன்) - இடை நிலையும் சாரியையும் விகுதியும் பொருந்தியது. நடக்கின்றனன் (நட+க்+கின்று+அன்+அன்) சந்தி, இடைநிலை, சாரியை விகுதி பொருந்தியது. கேடு (கெடு என்பது கேடு என்று திரிந்தது)-திரிதல். நடந்தான் - உயர்திணையையும், ஆண்பாலையும், படர்க்கை இடத்தையும் இறந்த காலத்தையும் விளக்கியது. உழுதான் - செய்வினை நடத்தப்பட்டான் - படுவினை (செயப்பாட்டுவினை) நடந்தான் - தன்வினை நடத்தினான் - பிறவினை நடந்தான் - விதிவினை (உடன்பாட்டு வினை) நடவான் - எதிர்மறை வினை சாத்தன் நடந்தான் - முதல்வினை (செய்வோனின்வினை) கண் பார்த்தது - சினை வினை |