ஒரு சொல்லே ஒன்றுக்கு மேற்பட்ட வினையாக வருதலைப் பொது என்று குறிப்பிட்டுள்ளார். துணியை வெளுத்தான் - பிறவினை துணி வெளுத்தது - தன்வினை வெளுத்தான் என்பது தன்வினையாகவும் பிற வினையாகவும் பயன்பட்டது. வல்லார் (வல்லவர்) - உடன்பாடு எளியர் (வன்மை இல்லாதவர்) - எதிர்மறை வல்லார் திறை (கப்பம்) கொள்வர் - உடன்பாடு வல்லார் திறை கொடுப்பர் - எதிர்மறை |  | இலக்கணக்கொத்து உரையிலிருந்து எடுக்கப் பட்ட உதாரணம். | எனல் (திருக்குறள் 196) - ‘என்று சொல்’ - உடன்பாடு எனல் (திருக்குறள் 196) - ‘என்று சொல்லாதே’ - எதிர்மறை புலி கொன்ற யானை என்பது புலி யானையைக் கொன்றது என்ற பொருளைக் குறிக்கும்போது செய்வினையாகவும், யானை புலியைக் கொன்றது என்ற பொருளைக் குறிக்கும்போது புலி யானையால் கொல்லப்பட்டது எனச் செயப்பாட்டுவினையாகவும் கொள்ளப்படும். அவன் பருத்தான் என்பதில் எழுவாய் மனிதனைக் குறிக்கும் போது முதல் வினையாகவும் அவன் உடலைக் குறிக்கும்போது சினைவினையாகவும் கொள்ளவேண்டும். நடந்தான் என்பது இறந்த காலத்தைக் காட்டுவதால் தெரிநிலைவினை. இல்லை என்பது காலத்தைக் காட்டாததால் தெரியாநிலைவினை - குறிப்புவினையே இது. |