படித்த நூல் - பெயரெச்சம் படித்து மகிழ் - வினையெச்சம் |  | படித்த, படித்து இவை இரண்டும் வெவ்வேறு வடிவின. | தேடிய பொருள் - (செய்த என்னும் வாய்பாடு) பெயரெச்சம் தேடிய வந்தான் - (செய்யிய என்னும் வாய்பாடு) வினையெச்சம்) (தேடுவதற்கு வந்தான் என்று பொருள் பட்டு வினையெச்சமாகும்) தேடிய என்பது பெயரெச்சத்திற்கும் வினையெச்சத்திற்கும் பொது வடிவுடையது. வந்தான் - ஒருமை வினை; வந்தார் - பன்மை வினை வரும் - ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவான வினை இச்சூத்திரம் இலக்கணக்கொத்து 67-ஆம் சூத்திரத்தை அடியொற்றிச் சுருக்கி எழுதப்பட்டுள்ளது. பாட விளக்கம் : ‘திரிபினும்’ என்ற மூலபாடம் (3-வது வரி) ‘திரியினும்’ என்று திருத்தப்பட்டுள்ளது. 49. | தருதொழிலின் பொருத்தமதாற் பொருளாதி பெயரிற் சார்ந்து,தான்தொட ராய்,வேற் றுமை உருபுஏற் பிலதாய்க், கருவியினாற் பதமுடிவின் இயல்பெற்றுத் தோற்றிக் காலம்விளக் கியுந்தொகுத்து முடிதன்முற் றாம்.அதுவே ஒருவன்முதல் ஐந்திணையும் படர்க்கையினும் பன்மை ஒருமையைத்தன் மையினொடுமுன் னிலையினும்,முக் காலம் முரணிமுறை யேஐமூன் றுஆறாய் வினையின் முற்றுச்சொல் ஒன்றேமூ வொன் பதாம் அன்றே. (3) | முற்றுச் சொல்லின் இலக்கணம் கூறுகின்றது. உரை : பொருள் முதலிய அறுவகைப் பெயரைச் சார்ந்து தொடர்வினையாய் வேற்றுமை உருபு ஏற்காது |