பக்கம் எண் :
 
சுவாமிநாதம்108சொல்லதிகாரம்
காலத்தை வெளிப்படையாகவும் குறிப்பாகவும் ஏற்பது முற்று. ஆண், பெண்,
பலர், ஒன்று, பல என ஐம்பாலையும் படர்க்கையிலும் பன்மையையும்
ஒருமையையும் தன்மை, முன்னிலையிலும் மூன்று காலத்திலும் சேர்த்துக்
கொண்டு வர முற்றுச் சொல் ஒன்றே இருபத்தேழு ஆக வரும்.
 
விளக்கம் :
செய்தான் அவன் - வினைமுற்று, பொருட்பெயர் கொண்டது.
 
தோன்றியது ஊர் - வினைமுற்று, இடப்பெயர் கொண்டது.
 
வந்தது மழை - வினைமுற்று, காலப்பெயர் கொண்டது.
 
எழுதியது கை - வினைமுற்று, சினைப்பெயர் கொண்டது.
 
வென்றது உண்மை - வினைமுற்று, பண்புப்பெயர் கொண்டது.
 
சிறப்புற்றது வாழ்வு - வினைமுற்று, தொழிற்பெயர் கொண்டது.
 
செய்தான் - இறந்த காலத்தைத் தெளிவாக விளக்கியது.
 
நல்லன் - காலத்தை வெளிப்படுத்தவில்லை.
 

படர்க்கை: ஐந்துபால் X மூன்று காலம் - 15
 

தன்மை: ஒருமை,
பன்மை என இரண்டு X மூன்று காலம் - 6
 
முன்னிலை: ஒருமை,
பன்மை என இரண்டு X மூன்று காலம் - 6
 

------
27