பக்கம் எண் :
 
சுவாமிநாதம்114சொல்லதிகாரம்

பாட விளக்கம் :‘மற்றகாம்’ (3-வது வரி) என்ற தொடர் விளங்கவில்லை.

53. செய்து,செய்பு செய்யா,செய் யூ,இறப்பும்; செய்யச்,
செய்யிய,செய் யியர்வான்,பான் பாக்கு,எதிர்வுங்; காலம்
எய்திவினை, வரின்முடியும் வினையெச்சம்; அன்றி
இன்றிஏலால் காணுமாயின் இவ்வே யும்மே.
மெய்தெரிபேர்ப் பயனிலைதீர் உருபுஇவைபோற் பிறவும்
வினையெஞ்சி லக்குறிப்பா குஞ்;சினைதம் மோடுங்
கொய்தமுத லொடுமா (ம்); முற்றெச்சமுமாம்;
வினைச்சொற் கூட்டமள விலை ஐந்தின் அடக்குவதாம்
 

உரித்தே. (7)

 

இது வினையெச்சம் கூறுகின்றது.

உரை : செய்து, செய்பு, செய்யா, செய்யூ ஆகிய வாய்பாட்டு
வினையெச்சங்கள் இறந்த காலத்தையும், செய்ய செய்யிய, செய்யியர்
செய்வான், உண்பான், செய்பாக்கு ஆகிய வாய்பாட்டு எச்சங்கள்
எதிர்காலத்தையும் காட்டும். வினை கொண்டு முடிவது வினையெச்சமாகும்.
அன்றி இன்றி, ஏல், ஆல் முதலியனவும் வினையெச்சத்தின் தன்மையைப்
பெறும். சினைவினை சினையோடு மட்டுமின்றி முதலோடும் வந்து முடியும்.
வினைமுற்று வினையெச்சமாகவும் வரும். வினைச்சொற்களின் தொடர்நிலை
பண்புக்கு அளவு கிடையாது. அவற்றை மேலே குறிப்பிட்ட முதனிலை,
தொழிற்பெயர், வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம் என்ற ஐந்து
வகைக்குள் அடக்கி விளக்கலாம்.

விளக்கம் :

உண்டு வருவான் - செய்து
பச்சிலை இடை இடுபு தொடுத்த (புறம். 33) - செய்பு
கல்லாக் கழிப்பர் (கல்லாமல் கழிப்பர்) - செய்யா
காணூ மகிழ்ந்தான் (கண்டு மகிழ்ந்தான்) - செய்யூ
காண வந்தான்
காணிய வந்தான்
காணியர் வந்தான்
(காண்பதற்கு வந்தான்) - செய்ய
- செய்யிய
- செய்யியர்