கொல்வான் வந்தான் (கொல்வதற்கு வந்தான்) | - வான் | உண்பான் வந்தான் (உண்பதற்கு வந்தான்) | - பான் | உண்பாக்கு வந்தான் ’’ | - பாக்கு | அவன் அன்றி ஓரணுவும் அசையாது | | (அவன் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது) | - அன்றி | மழை இன்றி நிலம் வறண்டது (மழை இல்லாமல் நிலம் வறண்டது) | - இன்றி | உண்பானேல் பசி தீரும் உண்ணுமேல் பசி தீரும் தீரும் பசி நீங்கும்) |  | (உண்டால் உண்டால் பசி | - ஏல் - ஏல் - ஆல் |
கால் ஒடிந்து விழுந்தான் - சினைவினை முதல் வினையைச் சார்ந்தது. ஏனெனில் ஒடிந்து என்பது கால் என்ற சினையின் தொழிலைக் குறிப்பதால் சினைவினை ஆயிற்று. விழுந்தான் என்பது ஆள் முழுமையும் குறிப்பதால் முதல் வினை ஆயிற்று. கால் ஒடிந்து விழுந்தது - சினைவினை மற்றொரு சினைவினையோடு முடிந்தது விழுந்தது என்பது காலாகிய சினையைக் குறிக்கும். கண்டான் வணங்கினான் (கண்டு வணங்கினான்) - வினை முற்று வினையெச்சமாக வந்துள்ளது. ஒரு சொல் (Part of speech) ஏற்கும் எல்லா விகுதிகளையும் சேர்த்துக் கூறும் தொகுதியை (வா, வருகிறான், வருவான், வந்தான், வராமல், வந்த, வருகிற என்பது வா என்ற வினைச்சொல்லின் அடுக்கு) அடுக்கு (Paradigm) என்பர். சொல்லியல் ஆராய்ச்சியில் சொல்லடுக்கைக் குறிப்பிடும் முறையும் பகுதி விகுதியாகப் பகுத்துக் கூறும் முறையும் உண்டு. வினையெச்சங்களைச் செய்து, செய்பு போன்று அடுக்கு முறையில் முன்னரும் வான், பான், பாக்கு என்று பகுப்பு முறையில் பின்னரும் கூறியுள்ளார். இது நன்னூல் 345, 351 ஆகிய இரண்டு சூத்திரத்தையும் இலக்கணவிளக்கம் 246-ஆம் சூத்திர உரையையும் |