பக்கம் எண் :
 
சுவாமிநாதம்123சொல்லதிகாரம்
4. கழிவு
 
: சிறியகட் பெறினே எமக்கு ஈயுமன்னே (புறம். 235) - அவன்
இப்பொழுது இறந்ததனால் எமக்குக் கொடுத்தல் கழிந்தது என்னும்
பொருளைத் தருவதால் கழிவு.
‘கொல்’ தரும் பொருள்கள் :
 
1. ஐயம் : இவ்வுரு குற்றி கொல்! மகன் கொல்! - குற்றியோ மகனோ என்னும்
பொருளைத் தருவதால் ஐயம்.
 
2. அசை நிலை : ‘என்நோற்றான் கொல் எனும் சொல்’ (குறள். 70) - பொருள்
இல்லாமல் சார்த்தப்பட்டிருப்பதால் அசைநிலை.
 
‘மா’ தரும் பொருள்:
 
1. அசைநிலை
 
: உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யானே - உப்பில்லாமல்
புல்லரிசி உணவை உண்பாயாக. இங்கு ‘மா வியங்கோளை
அடுத்து அசைநிலையாக உள்ளது.
 
‘ஓ’ தரும் பொருள்கள்:
1. நீக்கம் : (பிரிநிலை) இவனோ கொண்டான் - இது பலருள் நின்றும்
ஒருவனைப் பிரித்து நிற்பதால் பிரிநிலை.
 
2. எதிர்மறை : அவனோ கொண்டான் - அவன் கொண்டிலன் என
எதிர்மறைப் பொருளைத் தருவதால் எதிர்மறை.
 
3. அசை  : ‘காணிய வம்மினோ’- காண வாருங்கள். இங்குப் பொருள்
இல்லாமல் வந்துள்ளதால் அசை.
 

4. தெரி (தெரிநிலை)

: ஆணோ? அதுவுமன்று பெண்ணோ? அதுவுமன்று -
இங்கு அத்தன்மை இல்லாமையைத் தெரிவிப்பதால்
தெரிநிலை.