| பாக்குறிப்புஎண் பண்பிசைபேர் வினைஆறு னவாம் பயமிலைகா லம்பெருமை பயன்நான்குங் கொள்ளுந் தேக்குஒழிவு காலம்விழை வதுமூன்றுந் தில்லாந், தேற்றம்ஒன்றே மன்றவதாம், எளிமை தஞ்சஞ்கேளே. (2) | சில இடைச்சொல்லின் சிறப்பிலக்கணம் கூறுகின்றது. உரை: ‘மன்’ என்ற இடைச்சொல் 1. ஆக்கம் 2. ஒழியிசை 3. அசைநிலை 4. கழிவு என்ற நான்கு பொருளைத் தரும். ‘கொல்’ என்பது 1. ஐயம் 2. அசை நிலை என்ற இரண்டு பொருளைத் தரும். ‘மா’ என்பது வியங்கோளின் கண் வரும் அசைச்சொல்லாம். 1. நீக்கம் 2. எதிர்மறை 3. அசைநிலை 4. தெரிநிலை 5. பிரிநிலை 6. வினா 7. ஒழியிசை 8. சிறப்பு ஆகிய எட்டு பொருளில் ‘ஓ’ என்ற இடைச்சொல் வரும். ‘எற்று’ என்பது போகல் என்ற பொருளில் மட்டுமே வரும். ‘என்று’ ‘என’ என்ற இரண்டு இடைச்சொற்களும் 1. குறிப்பு 2. எண் 3. பண்பு 4. இசை 5. பெயர் 6. வினை என்ற ஆறு பொருளில் வரும். கொன் என்ற இடைச்சொல் 1. பயம் இல்லாமை 2. காலம் 3. பெருமை 4. பயன் என்ற நான்கு பொருளைத் தரும். ‘தில்’ என்பது 1. ஒழியிசை 2. காலம் 3. விழைவு என்ற மூன்று பொருளையும் ‘மன்ற’ என்பது தேற்றப்பொருள் (தெளிவுப் பொருள்) ஒன்றையும் ‘தஞ்சம்’ என்பது எளிமைப் பொருளையும் தரும் இடைச் சொற்களாம். விளக்கம் : ‘மன்’ தரும் பொருள்கள்: 1. ஆக்கம்: பண்டு காடுமன் - இன்று வயல் ஆயிற்று என்று ஆக்கப்பொருளைத் தருவதால் ஆக்கம். 2. ஒழிவு: கூரியதோர் வாள் மன் - இங்கு வாள் மிக நன்றாக அறுத்தது என்னும் பொருள் தருவதால் ஒழிவு. 3. அசை: அதுமன் கொண்கன் தேரே - இடைச்சொல்லுக்குப் பொருள் இல்லாமையால் அசை. |