பக்கம் எண் :
 
சுவாமிநாதம்121சொல்லதிகாரம்

இடைச்சொல்லைத் தொல்காப்பியமும் இலக்கண விளக்கமும்
ஏழுவகையாகவும் நேமிநாதமும் முத்து வீரியமும் ஆறு வகையாகவும்
நன்னூலும் தொன்னூல் விளக்கமும் எட்டு வகையாகவும் கொள்ளச்
சுவாமிநாதம் மட்டும் ஒன்பது வகையாகக் கொண்டுள்ளது.

நன்னூலில் வினை என்பது கால இடைநிலையையும் பால் விகுதியையும்
குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை இவர் விகுதி, இடைநிலை என்று
இரண்டாகக் கொண்டார். நன்னூலில் கூறப்பட்ட

குறிப்பு (420) என்பது விடப்பட்டு எழுத்துச் சாரியையைத் தனிவகையாகக்
கொண்டதால் இடைச்சொல் ஒன்பது வகையாயிற்று.

மொழியின் முன்னும் பின்னும் இடைச்சொல் வரும் என எல்லா
ஆசிரியர்களும் சொல்லியிருக்க முன், பின். நடு ஆகிய மூன்று இடத்திலும்
வரும் என்று இவர் கூறுகின்றார்.

ஏகாரத்தின் பொருள் ஆறு என்பதும் (தொல்காப்பியம் ஐவகை சொல்:
257) நன்னூலைப் (422) பின்பற்றியது. உம்மையின் பொருள் எட்டு என்பதும்
(தொல். சொல். 255, நன். 425) ‘மற்று’ இரண்டு பொருளில் வரும் என்பதும்
(தொல். சொல். 262, இ.வி. 266) நன்னூல் தவிர எல்லா இலக்கணத்திலும்
காணப்படுகிறது. நன்னூலார் மட்டும் வினை மாற்று, அசைநிலை, பிறிது
(வேறு) என்று மூன்று பொருளில் வரும் என்று குறிப்பிடுகிறார். (433).
தொல்காப்பியத்தை (சொல்-251) யொட்டியே ஈறு திரிந்து வரும் என்று
கூறியுள்ளார். இவ்வுண்மை நன்னூல், இலக்கணவிளக்கம் ஆகிய நூல்களில்
கூறப்பெறவில்லை.

55. ஆக்கம்ஒழிவு அசைகழிவு நான்கு(ம்)மன்னே யாகும்.
ஐயம்அசை இரண்டுகொல்லாம், அசைவியங்கோள் மாவா(ம்)
நீக்க(ம்)மறை அசைதெரிவு பிரிவுவினா ஒழிவு
நிகழ்சிறப்பு எட்டு ஓவாகும், போகல் ஒன்று, எற்று ஆகும்
 

என்று என