6. ஈற்றிசை: ஆசிரியர் வந்தாரே. இங்கு பொருள் இல்லாமல் இறுதியில் அசையாக வந்துள்ளதால் ஈற்றசை. ‘உம்’ என்ற இடைச்சொல் தரும் எட்டுபொருள்கள்: 1. எதிர்மறை: பிச்சை எடுத்தாலும் கற்க வேண்டும். இங்கு பிச்சை எடுக்கக்கூடாது என்ற பொருள் தருவதால் எதிர்மறை. 2. தெரிவு (தெரிநிலை) : நன்றும் அன்று, தீதும் அன்று. 3. ஆக்கம்: நல்லவனும் ஆயினான், வல்லவனும் ஆயினான் என்று ஆக்கவினை வந்திருப்பதால் ஆக்க உம்மை. 4. எச்சம்: பட்டமும் பெற்றான் என்பது ஒரு துறையில் அதற்குரிய அறிவும் பெற்றான் என்று பொருள் தருவதால் எச்ச உம்மை. 5. ஐயம்: அவன் வெற்றிபெற்றாலும் பெறுவான் - இங்கே துணிந்து கூறாமையின் ஐய உம்மை. 6. முற்று: பணம் பத்தும் கொடுத்தான் என்பது அவனிடம் இருந்த முழுப்பொருளையும் கொடுத்தான் என்பதால் முற்றும்மை. 7. எண்: இரவும் பகலும் - இங்கு எண்ணுதற்கண் வருதலால் எண்ணும்மை. 8. சிறப்பு: குறவரும் மருளும் குன்று என்பது மலையில் வாழும் குறவர்களே மருட்சி அடையக்கூடிய மலை என்று பொருள்படுவதால் மலையின் சிறப்புப்பெறப்பட்டது. ‘மற்று’ என்பது தரும்பொருள் இரண்டு: 1. வேறு: இனி மற்று ஒன்று உரை. 2. அசைநிலை: அது மற்று அவலம் கொள்ளாது - இங்கு ‘மற்று’ என்பதற்கு பொருள் இல்லை. |