ஏ, ஒ, மன்ற என்பன போன்று கீழே விளக்கும் இடைச்சொற்கள் இவ்வகையைச் சார்ந்தவை. எழுத்தணவல் என்பது கரம், காரம் போன்ற எழுத்துச் சாரியைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். கடைசியில் வந்தது - அது மன். இடைநிலையில் வருவது - கால இடைநிலை, சாரியை போன்றவை. செய்தான்<செய்-த்-ஆன், மரத்தை < மரம்-அத்து-ஐ, இறுதியில் வருவது வேற்றுமை உருபு, விகுதி போன்றவை - தாளால்< தாள்-ஆல்; செய்தான்< செய்-த்-ஆன். ஒன்று வருதல்-கையே : ஏகார மட்டும் ஒன்று வந்தது. பல வருதல்-சாரியையும் உருபும் சேர்ந்து வருதல் - காலினை< கால்-இன்-ஐ: இடைநிலை, சாரியை, விகுதி ஆகியவையும் சேர்ந்து வரும். நடந்தனன்< நட-ந்த-அன்-அன். தில் என்ற இடைச்சொல் ‘தில்ல’ என்றும் வருவது ஈறு திரிந்து வருவதற்கு உதாரணமாகும். ‘ஏ’ என்ற இடைச்சொல்லின் ஆறு பொருள்கள்: 1. எதிர்மறை: நண்பனே கொண்டான். இங்கு நண்பன் கொள்ளவில்லை என்ற பொருள் தருவதால் எதிர்மறை. 2. தேற்றம் : உண்டே கடவுள். இங்கு உண்டு என்பது ஐயமில்லை என்னும் தெளிவுப் பொருளைத் தருவதால் தேற்றம். 3. பிரிவு: நூல்களுள் தொல்காப்பியமே சிறந்தது. இங்கு பல நூல்களுள்ளும் தொல்காப்பியத்தைப் பிரித்து நிற்றலால் பிரிவு. 4. எண்: நாலேகால் (நாலும் காலும்) 5. வினா: நீயே வந்தாய் இங்கு நீயா வந்தாய் என்று பொருள் தருவதால் வினா. |