பக்கம் எண் :
 
சுவாமிநாதம்248
 

     (முதல்) இரண்டு சீர்களில் மோனை முதலாயின வரும்படி பாடுவது
இணைத்தொடை.

     (முதல்) மூன்று சீர்களில் மோனை முதலாயின வரும்படி பாடுவது
கூழைத்தொடை.

     நான்கு சீர்களிலும் மோனை முதலாயின வரும்படி பாடுவது
முற்றுத்தொடை.

     நான்கு சீர்களில் முதல் சீரும் நான்காம் சீரும் மோனை முதலாயின
வரும்படி தொடுப்பது ஒரூஉத் தொடை.

     முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை முதலிய தொடைகள் வருவது
பொழிப்புத் தொடை.

     முன்னயற்சீர் (அதாவது இரண்டாவது சீர்) நீங்கலாக ஏனைய
சீர்களில் (1, 3, 4 ஆம் சீர்களில்) மோனை முதலிய தொடைகள் வருவது
மேற்கதுவாய்த் தொடை.

     பின்னயற்சீர் (அதாவது மூன்றாவதுசீர்) இல்லாமல் ஏனைய சீர்களில்
(1, 2, 4 ஆம் சீர்களில்) மோனை முதலியன வருவது கீழ்க்கதுவாய்த் தொடை.

      விளக்கம் : அனு என்பது இனம் என்ற பொருளில் யாப்பருங்கலக்காரிகை (பக். 169) உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.