வரியிலும் கீழே வந்து மீண்டும் மேல் நோக்கவும் கீழ் வரியிலும் அவ்வாறே மேலுற்றுக் கீழ்நோக்கவும் பெரியவார் போக்கி இந்தவார் நான்கும் நான்கு வரியாகவும் பாடுவது முரசுபெந்தம். ஒரு பொருள் தரும்சொல் ஒரு மாத்திரை மிகுதிப்படுத்த வேறொரு பொருள் தருவது மாத்திரை வருத்தனம். ஒரு பொருள் தரும்சொல் ஒரு மாத்திரையைக் குறைக்க வேறொரு பொருள் தருவது மாத்திரைச் சுருக்கம். 200. | பாஎனினும் இனம்எனினும் ஓர் கவியாய்ப் பதம்எதுகை பொருள்ஒப்பச் சொல்பிறிது கவியாம்; மாவலகில் ஏற்கு(ம்)மறை யொருவரியாய் நான்கு வரிபிடியாய் ஏற்கு(ம்)மறை வலஞ்சுற்றி முனைமேல் மேவல்கட கபெந்தம்; பன்மூன்றுப தினொன்று வியன்ஒன்பான்தட்டுஉடைத்தாய்க் கீழத்தட்டு முதலே ஓவலிடம் வலஞ்சுற்றி மேல்போய்நேர் இழிந்தே ஒத்துக்கீழ்த்தட்டின்இறும் தேர்க்கவியின் அரணே. [7] | பிறிதுகவி, கடகபெந்தம், தேர்க்கவி ஆகியவற்றை விளக்குகிறது. உரை : ஒரு செய்யுளை அடியும் தொடையும் வேறுபடுத்தினாலும் சொல்லும் பொருளும் வேறுபடாது வேறொரு செய்யுளாக வருவது பிறிதுகவி. ஒரு வரி மறைந்து நான்கு வரி பிடியாக அமைந்தும் ஏற்கும் மறை வலமாகச் சுற்றி முனையில் பொருத்துவது கடகபெந்தம். பதின்மூன்று வரியும் பதினாறு வரியும் ஒன்பது வரியும் தட்டு உடையதாய்க் கீழ்த்தட்டு முதலாக இடமாகவும் வலமாகவும் சுற்றி வந்து மேலே போய் நேரே கீழ் இறங்கி வந்து ஒத்துக் கீழ்த்தட்டில் முடிவது தேர்க்கவி. |