201. | அரவுஇரண்டு கலந்துஇனிசை நேரிசைவெண் பாவின் ஆண்பெண்மேற் சொலு(ம்)நாகபெந்தம்;மறை தலைவால் இருவயிறு, நால்மூலை,நாள்இசைவும், ஐந்தைந்து; இடைநான்குஎவ் வெட்டாய்த் தொண் ணூற்றிரண்டன் பான்ஏழ் ஒருகவிக்காய்; நூற்றுப்பன் னான்குஎழுத்துத் தலைவால் உற்றநாலிசை வில்ஒவ் வொன்றிடைநான்கு ஈரெட்டாய், மருவுசந்தி யிரட்டுமற்ற சந்திஅட்ட நாகம் வகுப்பதும்வால் கறைபதினொன்று இடுவதுஞ்சில் விடத்தே. [8] | நாக பெந்தம் விளக்குகின்றது. உரை : இரண்டு பாம்புகள் தம்முள் இணையும்படியாக எழுதி ஒரு இன்னிசை வெண்பாவும் ஒரு நேரிசை வெண்பாவும் எழுதி ஆண், பெண் மேல் சொல்லுதல் நாகபெந்தம். தலையும், வாலும் இருவயிறும் நான்கு மூலையில் நான்கு பொருத்து வாயிலும் அமைத்து ஐவ்வைந்து இடையில் நான்கு. எவ்வெட்டாக அமைத்துத் தொண்ணூற்றிரண்டின் மேல் ஏழு ஒரு கவியாகவும் நூற்றுப் பதினான்கு எழுத்துத்தலையும், வாலும் உற்ற நான்கு பொருத்து வாயிலும் ஒவ்வொரு இடைக்கு நான்கு, எவ்வெட்டு ஆகப்பொருந்து சந்தியில் இரட்டியும் ஏனைய சந்தியில் அட்டநாகம் வகுப்பதும் வால் கறையில் பதினொன்று இடுவதும் சில இடங்களில் உண்டு. |