மய வ வு மா(ம்) மெய் மயக்கத்து இடைநிலையாம்; போலி வகை அம்முன் இய ஐயாம் உ வ இயைய வௌவாஞ் சஞய அயலின் முதலிடையிலே அ ஐ போலிசைவாம்; அகரங் கான் கரங் காரம் எழுத்திசை சாரியையே. (10) | மெய்மயக்கங்களின் விரிவும் போலியும் எழுத்துச் சாரியையும் கூறுகின்றது இது. உரை: ககர மெய்முன் ககரமும் வகரமெய்முன் யகரமும் ஞ, ந என்ற மெய்முன் முறையே இவற்றின் இனமான ச, த, என்பனவும் மயங்கி வரும் ய, ர, ழ என்ற மூன்று மெய்களின் முன்னர் மொழிக்கு முதலில் வரும் எல்லா மெய்யெழுத்துக்களும் மயங்கி வரும். மகரமெய்முன் ப, ய, வ ஆகிய மூன்று மெய்யும் மயங்கும். ட, ற என்ற இரண்டு மெய்யெழுத்துக்களின் முன் க, ச, ப என்ற மூன்று மெய்யும் மயங்கும். ல, ள என்ற இரண்டு மெய்யெழுத்துக்களின் முன் க, ச, ப, வ, ய என்ற ஐந்து மெய்களும் மயங்கும். ன, ண என்ற இரண்டு மெய்களின்முன் முறையே இன எழுத்தான ற, ட என்ற மெய்களும் க,ச,ப,ஞ,ம,ய,வ ஆகிய மெய்யெழுத்துக்களும் மயங்கும். அகரமுன் இகரமும் யகரமும் தனித்தனியே சேர ஐகாரம் ஆவதும், உகரமும் வகரமும் தனித்தனியே சேர ஒளகாரம் ஆவதும் போலி எழுத்தின் ஒரு வகையாம். ச,ஞ,ய பின்னால் மொழிமுதலிலும் மொழிஇடையிலும் அகரமும் ஐகாரமும் ஒரு பொருள்பட அதாவது போலியாக இசைக்கும். அ, கான், கரம், காரம், ஆகிய நான்கும் எழுத்துச் சாரியைகளாகப் பயன்படும். |