ஏற்கத் தகுதி பெற்ற வடிவமான Stem என்றோ அழைக்கலாம். விகுதி என்பது சொல்லின் இறுதியில் வரும் பொருள் உடைய கூறு என்று இலக்கண ஆசிரியர்கள் கருதுகின்றனர். எனவே தான் பெயரிலும் வினைமுற்றிலும் பால் காட்டும் உருபை மட்டுமே விகுதியாகக் கொண்டுள்ளனர். ஆனால் விகுதி Suffix என்ற பொதுப் பொருளிலும் இன்று கையாளப்படுகின்றது. இடைநிலை என்பது வினைச்சொல்லில் காலங்காட்டும் விகுதியையே சிறப்பாகக் குறிப்பதாக இலக்கண ஆசிரியர்கள் கருதுகிறார்கள். பெயர்ச் சொல்லிலே பால் காட்டும் விகுதிக்கு முன்னால்வரும் அசைநிலைகளை (சாரியை)யும் இடைநிலை என்று கொண்டுள்ளனர். புலைத்தி என்ற பெயர்ச்சொல்லில் தகரமும் சேரமான் என்பதில் மகரமும் இடைநிலை என்று மயிலைநாதர் காட்டியுள்ளார். ‘பகுபதம், வினையாயின் விகுதிப் புணர்ச்சிக்கண் வருவன சாரியை என்றும் பெயராயின் பெயரிடைநிலை என்றும் பெயரளவில் தான் வேறுபாடு என்று கொண்டனர்’ என்பர் (சோ. ந. கந்தசாமி: இலக்கணச் சிந்தனைகள் பக்: 27). சந்தி என்பது பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வருவதாகக் கருதப்படுகிறது. சந்தி என்பது மிகுதல் புணர்ச்சியைக் குறிக்கும். படி என்ற பகுதியும் தகர இடை நிலையும் சேரும்போது தகரமெய் சந்தியாக வந்தது என்பர். படி+த்+த்+உ=படித்து சாரியை என்பது இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவில் வருவதாகக் கருதப்படுகிறது. படி என்ற பகுதியும் தகர இடைநிலையும் அன் என்ற விகுதியோடு சேரும்போது அன் என்ற சாரியை வரும். படித்தனன் பகுதி | சந்தி | இடைநிலை | சாரியை | விகுதி | படி | த் | த் | அன் | அன் | |