பெயரில் வேற்றுமை உருபிற்கு முன்வரும் சாரியையும் இங்கு எடுத்துக் கொள்ளலாம். பெயர் | சாரியை | விகுதி | | ஒன்று | அன் | ஐ - ஒன்றனை | | விகாரம் என்பதை ஒரு தனிப் பகுப்பாகக் (Segment) கருத முடியாது. பொதுவாக மேலே குறிப்பிட்ட ஐந்து உறுப்புகளும் மாற்றுவடிவம் பெறுவதை விகாரம் என்று அழைக்கலாம். காண் என்ற பகுதி இறந்த கால இடைநிலை முன் கண் என்று விகாரப்படும் நன்னூல் உரையாசிரியர்கள் கருத்துப்படி வாழ்ந்து என்ற வினையெச்சத்தில் வரும் நகரமெய் சந்தியாக வந்த தகர மெய்யின் விகாரமாகும். பகுபதச் சொற்களில் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை ஆகிய ஐந்தையும் சொற்கூறுகளாகக் (Segments) கொள்ள வேண்டும். ஆனால் பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய மூன்றே பகாப்பத உறுப்புக்கள். பகுபதச் சொல்லில் புறநிலை அமைப்பிலிருந்து (Surface structure) சென்றால் உயர்ந்த அளவு ஐந்து கூறுகள் இருக்கலாம். அவற்றைப் புறநிலை உறுப்புகள் என்று வேண்டுமானால் அழைக்கலாம். புதைநிலை அமைப்பில் (deep structure) பகுதி, விகுதி, இடைநிலை என்று மூன்றே உறுப்பாக அமையும். எனவே புறநிலையில் ஐந்து கூறுகளாக இருப்பது புதைநிலையில் மூன்று உறுப்பாகவே அமையும். எந்த நிலையிலும் விகாரத்தை ஒரு உறுப்பாகவோ கூறாகவோ கொள்ள முடியாது. பொதுவாக மொழி அமைப்பு நீண்டநிலை அமைப்பு (Linear structure) உடையதன்று என்றும் படிநிலை அமைப்பு (Hiearchical structure) உடையது என்றும் மொழியியலார் விளக்குவர். அதன்படி பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய முதல்படியில் உள்ள புதைநிலை உறுப்புகள்; அவை ஒன்றோடொன்று புணரும்போது மிகுதல் புணர்ச்சியாகச் |