பக்கம் எண் :
 
சுவாமிநாதம்41எழுத்ததிகாரம்
 

சந்தியும் சாரியையும் தோன்றும். அவை இரண்டாவது படியாக உள்ள
இடைப்பட்ட அமைப்பு (Intermediate structure); பின்னர், திரிதல்புணர்ச்சி
பெறுவதே விகாரம் எனப்படும். இதன் மூலம் புறநிலை அமைப்பிற்குரிய
அமைப்பாக வருவதை இறுதிப்படி (Terminal structure) என்று
அழைக்கலாம்.

     பகுதிகளை அவை ஏற்கும் விகுதிகளின் அடிப்படையைப் பகுப்பதே
சொற்கூறு (Parts of speech) எனப்படும். தமிழில் பெயர், வினை, இடை,
உரி என்ற பாகுபாடு ஓரளவு இந்தக் கருத்தில் எழுந்தது. ஒவ்வொரு வகைச்
சொல்லும் ஏற்கும் விகுதிகளை விளக்குவதே சொல்லியல் (Morphology)
எனப்படும்.

     சொற்களைப் பகுத்து ஆராய்ந்த பின்னரே ஒரு சொல்லிற்குரிய
பல்வேறு வடிவங்களையும் அவை வருமிடங்களையும் அறிந்து கொள்ள
முடியும். சொல்லைப் பகுத்து ஆராய்வது மொழியியலார் சொல்லியல்
ஆராய்ச்சியில் முதற்கூறாகக் கருதும் பகுப்பு (Segmentation) என்பதோடு
ஒத்தது. பகாப்பதம் என்பது ஓர் உருபனை மட்டுமே உடைய ஓர் உருபுச்
சொல் (Monomorphemic word) என்றும் பகுபதம் என்பது ஒன்றுக்கு
மேற்பட்ட பல உருபன்களை உடைய பல்லுருபுச்சொல் (Polymorphemic
word) என்றும் கொள்ளலாம்.

     பகுப்பு ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு சொல்லின் பல்வேறு
வடிவங்களையும் தொகுத்து அதற்கு ஒரு பொது வடிவம் (Base form)
எடுத்துக் கொள்வர் மொழியியலார். சொல்லியல் ஆராய்ச்சியில் பொது
வடிவத்தைத் தேர்ந்தெடுப்பதை (Selection of Base form) இரண்டாவது
கூறாகக் கருதுவர். பிற்கால இலக்கணங்கள் அனைத்தும் சொல்
தனித்தியங்கும்போது கொள்கிற வடிவத்தையே (Free form) பொது
வடிவமாகக் கொண்டதால் பொது