27. | சார் எண் வேற்றுமை விரிந்துந் தொகுத்தும் அவ்வப் பொருளைத் தழுவுதொடர் வேற்றுமையின்வழி விரிவாய்த் தொகையாய்ப் பேரில் வினையிடையுரிச் சொற்றொடர் பொருள் அவ்வழியே. பின்பு பொது வழியடங்கா வழிபுணர் நாற்சந்தி சேர்புணர்ச்சி புணர்ச்சியின்றாய் எழுத்து மொழி தோன்ற றிரிதல் கெடன் மாறல் விகாரம், விரித்தனீட்டல் ஆர்குறுக்கல் வலிமெலிமுக்குறை தொகுத்தன் முன் மூன்றாம் ஒன்று நானாலாய்ச் சொல்லினும் உய்குவரே. (5) | இது சந்தியும் விகாரமும் விளக்குகிறது. உரை: வேற்றுமை உருபு விரிந்தும் தொக்கும் அவ்வப் பொருளைத் தருகின்ற புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சி. வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியன தொடர்ந்து வருவது அல்வழித் தொடராகும். புணர்ச்சி நான்கு வகைச் சந்தி (இயல்பு, தோன்றல், திரிதல், கெடுதல்) சேர்ந்தது. புணர்ச்சிஇல்லாத இயல்பும், எழுத்தும் மொழியும் தோன்றல், திரிதல், கெடுதல், மாறுதல் ஆகிய நால்வகை விகாரமுமாகும். விரித்தல், நீட்டல், குறுக்கல், வலித்தல், மெலித்தல், முதற் குறைத்தல், இடைக்குறைத்தல், கடைக்குறைத்தல், தொகுத்தல் என ஒன்பதாகவும் ஒன்று நான்காகவும் சொல்லலாம். பாலை + கறந்தான் = பாலைக்கறந்தான். இரண்டாம் வேற்றுமை விரிப்புணர்ச்சி. பால் + கறந்தான் = பாற்கறந்தான். இரண்டாம் வேற்றுமை தொக்குநின்ற புணர்ச்சி. நடித்து + காட்டு = நடித்துக்காட்டு. வினையெச்சத் தொடர். அல்வழிப் புணர்ச்சி. புணர்ச்சியில்லாமல் விகாரம் ஏற்படுவது தனிச்சொல்லில் மொழிமாற்றத்தால் ஏற்படும் மாற்றம் ஆகும். விளக்கம் : புணர்ச்சி விகாரம், புணர்ச்சியில் விகாரம் என்பது, இலக்கணக் கொத்தில் காணப்படும் ‘புணர்ச்சி விகாரம் புணர்ச்சியில் விகாரம் என இரண்டாகும் எழுத்து |