பக்கம் எண் :
 
சுவாமிநாதம்50எழுத்ததிகாரம்
 

பதமுன் விகுதி புணர்தல் விகுதிப் புணர்ச்சி.
          நட + த் + அன் + அன் > நடந்தனன்*.

இது சாரியை பெற்று வந்தது.

     பொருட்புணர்ச்சி : புளி + கறி > புளிக்கறி
     உருபுப் புணர்ச்சி : மான் + ஐ > மானை
     விகுதிப் புணர்ச்சி : நட + த் + ஆன் > நடந்தான்*

இவை மூன்று புணர்ச்சியிலும் சாரியை பெறாமல் வந்தன. அவற்றினை
(அவை + அற்று + இன் + ஐ) இங்கு இரண்டு சாரியை வந்துள்ளது.

     சாரியைகளை நன்னூலார் உருபு புணரியலிலும் (243) இலக்கண
விளக்கத்தார் உயிரீற்றுப் புணரியலிலும் (61) கூறியுள்ளனர். பகுபதத்தின் ஓர்
உறுப்பாகச் சாரியையைக் கொண்டு விட்டமையாலும் பகுதி, விகுதிகளின்
தொகைகளைப் பதமரபில் கூறினமையாலும் சாரியைகளின் தொகையைப் 
பதமரபில் கூறியது வரவேற்கத்தக்கதே. அவ்வாறு சாரியை வருமிடம் பற்றிய
இறுதிப் பகுதியும் நன்னூலில் உருபு புணரியலிலும் (243) இலக்கண
விளக்கத்தில் (61) உயிரீற்றுப் புணரியலிலும் கூறியதைச் சாமி கவிராயர்
பதமரபில் கூறியதும் பொருத்தமாக அமைந்து விட்டது.

     இச்சூத்திரம் நன்னூல் 141, 244, 243 ஆகிய சூத்திரங்களின்
தழுவலாகவே அமைந்துள்ளது


     * மொழியியலார் ‘ந்த்’ என்பதையே இறந்தகால விகுதியாகக் கொள்வர்.