(ஆண்பால், பெண்பால், அலிப்பால்) வடமொழிக்குச் சிறப்பாக உரியன. விளக்கம் : 29. | அ) (வாள்)அன்றி+பிடியா=அன்று பிடியா; இன்றி+பொய்ப்பின்=இன்று பொய்ப்பின் |  | இகரம் உகரமாக மாறல். | ஆ) கிளி + குறிது = கிளிக்குறிது ~ கிளிகுறிது: இகர முன் வல்லினம் வர உறழ்ந்தது. மெல்லினமும் இடையினமும் உறழ்ந்து வருதல் இல்லை. நாழி + உரி = நாடுரி: நிலைமொழி மாறுதல். 30. பனை + காய் = பனங்காய்: ஐகாரம் அகரமாக மாறி மெல்லினம் பெறுதல். 31. எண் + கடிது = எள் கடிது : ணகரம் ளகரமாக மாறியது. 32. பலவிதி பெறுதல் - பல புணர்ச்சி விதிகளை ஏற்று வரும் பொதுவிதி. பனை + காய் > பனை + அம் + காய் > பன் + அம் + காய் > பன் + அங் + காய் = பனங்காய். 33. ஒன்று + கால் = ஒன்றேகால்: ஏ என்ற இடைச்சொல் சேர்ந்தது. புணர்ச்சி விதிகள் முப்பத்து மூன்று என்று வரையறுத்துக் கூறியுள்ளார். ஆனால் அவை யாவை எனத் தெளிவாகத் தெரியவில்லை. எனவே சிலவற்றைப் பிரித்தும் தொகுத்தும் எண்ணுவதற்கு இடம் உண்டு. இரண்டு மொழிகளை ஒப்பிட்டு ஒற்றுமை வேற்றுமை காணும் ஒப்புமை மொழியியலில் (Contrastive Linguistics) |