பக்கம் எண் :
 
சுவாமிநாதம்61எழுத்ததிகாரம்
 

இரண்டு மொழிக்குரிய ஒலிகளை ஒப்பிட்டு ஒற்றுமை வேற்றுமையை
ஆராய்ந்து ஒவ்வொரு மொழி நோக்கிலிருந்தும் மற்றொரு மொழியில்
காணப்படும் சிறப்பு ஒலிகளை ஒருமொழி எவ்வாறு ஏற்றுக் கொள்ளும் என்று
விளக்குவர். தமிழ் இலக்கண ஆசிரியர்கள் கூறும் வடமொழியாக்கம் என்பது
ஒப்புமை மொழியியலோடு பெரிதும் தொடர்பு உடையது.

     இங்கு வடமொழி அடிப்படையில் சில இலக்கணக் கூறுகளும், தமிழின்
சிறப்பெழுத்துக்களும் தமிழ்மொழி அடிப்படையில் வடமொழியின் சிறப்பு
எழுத்துக்களும் சில இலக்கணக் கூறுகளும் பேசப்பட்டுள்ளன.

     விளக்கம் : தமிழ், வடமொழிச் சிறப்புத் தன்மைகள் நன்னூல் (150)
பிரயோக விவேகம் (45) ஆகியவற்றிலிருந்து தழுவிக் கொள்ளப்பட்டன.

32. காணும் அ,ஆ, இ,ஈ,உ,ஊ, ஏ,ஐ,ஓ,ஒள, க,ங,ச,ஞ,
     ட,ண,த,ந, ப,ம,ய,ர, ல,வ,ள, இவையே
சேணில்பொது எழுத்தாம்;இப் பொதுவெழுத்தும் வடசொற்
     சிறப்பெழுத்தும் ஈரெழுத்து மேஇயைந்து திரிந்த
வாணிபெயர் வாயுமற்றுப் பொதுவெழுத்துட் பொதுவாய்
     வருதமிழின் சிறப்பெழுத்தாய்த் திரிந்துமுன் பின்னிடையிற்
பூணும்விகா ரத்துஇயைந்தும் வடமொழி தென்மொழியாம் ;
     புகன்றகூட் டெழுத்தொட்டுப் பிரிந்தும் ஆர்த்திடுமே.  (5)

வடமொழி-தமிழ் வேறுபாடும் கடன் வாங்கும்போது ஏற்படும்
மாறுபாடும் விளக்குகின்றது.

     உரை : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள, க, ங, ச, ஞ, ட, ண,
த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள, ஆகிய இருபத்து ஐந்து எழுத்துக்களும்
தமிழுக்கும், வட மொழிக்கும் பொதுவான எழுத்துக்களாகும். இந்தப் பொது
எழுத்துக்களும் வடமொழிக்கே உரிய சிறப்பு எழுத்துக்களும் ஆகிய இரண்டு
வகை எழுத்துக்களுமே சேர்ந்து திரிந்தும் மொழிக்கு முன்னும் பின்னும்
நடுவிலும் வேண்டிய மாற்றம்