பக்கம் எண் :
 
சுவாமிநாதம்62எழுத்ததிகாரம்
 

பெற்றும் வடமொழிச்சொல் தமிழ்மொழிச் சொல்லாய் மாறி விடும்.

     விளக்கம் : நன்னூலார் ‘பொது எழுத்து ஒழிந்த நாலேழுந் திரியும்’
(146) என்று கூறினார். பொது எழுத்தும் கூடத் திரியும் என்று இவர் கூறியது
சிறப்பு உடையது. பிற மொழியிலிருந்து சொற்களைக் கடன் வாங்கும்போது
தாய்மொழியின் அமைப்பிற்கேற்பவே மாற்றிக் கொள்ளுவது எல்லா
மொழியிலும் காணப்படும் பண்பே ஆகும். அம் முறையை மொழியியலார்
Fashion of Adaptation என்று கூறுவர். மொழியின் அமைப்புக்
காலந்தோறும் மாறுவது போலவே தமிழ் மொழியாக்கமும் காலந்தோறும்
மாறுபடும். அடுத்த சூத்திரத்தில் சில எழுத்துக்கள் இரண்டு விதமாக (u§
என்பது ச, ய என்றும் ஷ என்பது ட, ச என்றும் மாறும் என்று கூறியது)
மாறும் என்பதும் இவ்வுண்மையை வலியுறுத்தும். ‘பிற பொதுவே’ என்று
நன்னூல் (150) கூறியதை இவ்வாசிரியர் விரித்து எழுதியுள்ளார்.

33. ஆரியத்தின் உயிரினுடை நான்கிருவில் லீற்றிரண்
     டவ்வைவருக்கத் தின்இடை யின்மூன் றாதி,மெய்எட்டு
ஈரெட்டோர் எழுமூன்றின் நான்கு யடவ;முப்பான்
     சய;பின்னொன்றுசட; விரண்டு சத, மூன்றகவாம்;ஐந்தே
யேரிருகச் சவ்வாகும் ஆவீறையீயீறு இகரமாம்;
     அ,ஆ; வி,யை; யுவ்வௌ, விரு,வார்; 
கூறுமிய்யே; யுவ்வோ; வேயை, யோவௌ, விசையுங்
     குவ்வநவி நநிபின்சொற் பொருணீத்துஞ் சொலுமே.  (4)

தமிழாக்க விதிகளைத் தொகுத்துக் கூறுகின்றது.

     உரை : வடமொழி உயிர் எழுத்துக்களில் இடையில் உள்ள நான்கு
எழுத்துக்களும் (ரு, ரூ, லு, லூ) தமிழில் ‘இரு’ ‘இல்’ என்றும் ஈற்றில் உள்ள
இரண்டு (அம், அஹ) எழுத்துக்களும் தமிழில் அகரமாகவும் திரியும். க, ச,
த, ட, ப என்ற ஐந்து வருக்கங்களை உடைய