பக்கம் எண் :
 
சுவாமிநாதம்65எழுத்ததிகாரம்
 

     தகரமாக மாறியது சங்ககாலத்திலும் சகரமாக மாறியது பிற்காலத்திலும்
ஏற்பட்டிருக்கவேண்டும். சங்க காலத்தின் முற்பகுதி ஸ என்பது மெய் கெட்டு
மாறியதும் உண்டு (T. Burrow. Collected papers in Dravidan Linguistics
p. 151, 154) அதனால்தான் ஸஹா - (சபா) அவை என்று வந்தது.

     ஹ > அ - அரன்
     ஹ > க - மோகம்
     க்ஷ > க்க - பக்கம்
     க்ஷ > ச்ச - தச்சன்
     ஆ > ஐ - மாலை
      ஈ > இ - புரி

     அருகன் என்பதிலிருந்து ஆருகதன் வந்ததால் அகரம் ஆகார மாயிற்று. சிவன் என்பதிலிருந்து சைவன் வந்ததால் இகரம் ஐகார மாயிற்று.

     புத்தன் - பௌத்தன் - உகரம் ஒளகாரமாயிற்று
     இருடி - ஆரிடம் - ‘இரு’ என்பது ‘ஆர்’ ஆயிற்று
     நர + இந்திரன் > நரேந்திரன் என்பதனால் இகரம் ஏகார மாயிற்று.

     குல + உத்துங்கன் > குலோத்துங்கன் என்பதனால் உகரம்
ஓகாரமாயிற்று.

     கேவலம் - கைவலம் என்பதனால் ஏகாரம் ஐகாரமாயிற்று
     கோசலம் - கௌசலை என்பதனால் ஓகாரம் ஒளகாரமாயிற்று.

         எதிர்மறை :      நாதன் - அநாதன்
                        உசிதம் - அநுசிதம்

     முதற் பகுதி நன்னூலையும் (147) பிற்பகுதி (அ ஆ ஐ என்ற மூன்றாம்
வரி முதல்) வீரசோழியத்தையும் (11 ஆம் சூத்திரம்) தழுவி எழுதப்
பெற்றுள்ளன.