வருங் காலை, அவர் வருங் காலை, அது வருங் காலை, அவை வருங்
காலை எனவும்;
கருவி - யான் எறியுங் கல், யாம் எறியுங் கல், நாம் எறியுங்
கல், நீ
எறியுங் கல், நீயிர் எறியுங் கல், அவன் எறியுங் கல், அவள் எறியுங் கல்,
அவர் எறியுங் கல், அஃது எறியுங் கல், அவை எறியுங் கல், எனவும்;
வினை முதல் - உண்ணும் யான், உண்ணும் யாம், உண்ணும் நாம்,
உண்ணும் நீ, உண்ணும் நீயிர், உண்ணும் அவன், உண்ணும் அவள்,
உண்ணும் அவர், உண்ணும் அது, உண்ணும் அவை எனவும்;
வினை - யான் உண்ணும் ஊண், யாம் உண்ணும் ஊண், நாம்
உண்ணும் ஊண், நீ உண்ணும் ஊண், நீயிர் உண்ணும் ஊண், அவன்
உண்ணும் ஊண், அவள் உண்ணும் ஊண், அவர் உண்ணும் ஊண், அஃது
உண்ணும் ஊண், அவை உண்ணும் ஊண் எனவும் இவை அறுபதும்
செய்யும் என்னும் பெயரெச்சம்.
இனிச், செய்த என்னும் பெயரெச்சம் வருமாறு: நிலம் - யான் உண்ட
இல், யாம் உண்ட இல், நாம் உண்ட இல், நீ உண்ட இல், நீயிர் உண்ட
இல், அவன் உண்ட இல், அவள் உண்ட இல், அவர் உண்ட இல், அஃது
உண்ட இல், அவை உண்ட இல் எனவும்;
பொருள் - யான் செய்த பொருள், யாம் செய்த பொருள், நாம் செய்த
பொருள், நீ செய்த பொருள், நீயிர் செய்த பொருள், அவன் செய்த
பொருள், அவள் செய்த பொருள், அவர் செய்த பொருள், அது செய்த
பொருள், அவை செய்த பொருள் எனவும்;
காலம் - யான் வந்த காலை, யாம் வந்த காலை, நாம் வந்த காலை,
நீ
வந்த காலை, நீயிர் வந்த காலை, அவன் வந்த காலை, அவள் வந்த காலை,
அவர் வந்த காலை, அது வந்த காலை, அவை வந்த காலை, எனவும்;
கருவி - யான் எறிந்த கல், யாம் எறிந்த கல், நாம் எறிந்த கல்,
நீ
எறிந்த கல், நீயிர் எறிந்த கல், அவன் எறிந்த கல், அவர் எறிந்த கல்,
அஃது எறிந்த கல், அவை எறிந்த கல் எனவும்;
வினை முதல் - உண்ட யான், உண்ட யாம், உண்ட நாம், உண்ட நீ,
உண்ட நீயிர், உண்ட அவன், உண்ட அவள், உண்ட அவர், உண்ட அது,
உண்ட அவை எனவும்;
|