பக்கம் எண் :
 
சொல் அதிகாரம்101

வினை - யான் உண்ட ஊண், யாம் உண்ட ஊண், நாம் உண்ட ஊண், நீ
உண்ட ஊண், நீயிர் உண்ட ஊண், அவன் உண்ட ஊண், அவள் உண்ட ஊண், அஃது உண்ட ஊண், அவை உண்ட ஊண் எனவும் இவை அறுபதும் செய்த என்னும் பெயரெச்சம்.

      இனி வினைக்குறிப்பு வருமாறு: யான் அன்று, யாம் அன்று, நாம்
அன்று, நீ அன்று, நீயிர் அன்று, அவன் அன்று, அவள் அன்று, அவர்
அன்று, அஃது அன்று, அவை அன்று எனவும்;

      யான் அல்ல, யாம் அல்ல, நாம் அல்ல, நீ அல்ல, நீயிர் அல்ல,

அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல, அஃது அல்ல, அவை அல்ல,
எனவும்;

      யான் வேறு, யாம் வேறு, நாம் வேறு, நீ வேறு, நீயிர் வேறு, அவன்
வேறு, அவள் வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு எனவும்;

      யான் இல்லை, யாம் இல்லை, நாம் இல்லை, நீ இல்லை, நீயிர்
இல்லை, அவன் இல்லை, அவள் இல்லை, அவர் இல்லை, அஃது இல்லை,
அவை இல்லை, எனவும்;

      யான் உண்டு, யாம் உண்டு, நாம் உண்டு, நீ உண்டு, நீயிர் உண்டு,
அவன் உண்டு, அவள் உண்டு, அவர் உண்டு, அஃது உண்டு, அவை
உண்டு, எனவும்;

     வியங்கோள் - யான் செல்க, யாம் செல்க, நாம் செல்க, நீ செல்க,
நீயிர் செல்க, அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க,
அவை செல்க, எனவும் இவை தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
மூன்றிடத்தும் இருதிணை ஐம்பாலினும் சென்றவாறு கண்டுகொள்க.

    ‘உடனொன்றிச் சேறலு முண்டு' என்றது என்னை? செல்லாமையும்
உண்டோ? எனின்; உண்டு. அவை யாவையோ? எனின், நிகழ்காலத்துச்
செய்யும் என்னும் சொல் * பல்லோர் படர்க்கையி
--------------------------
* ஈண்டு  நிகழ் காலத்துச் செய்யும் என்னும் சொல்  என்றது
செய்யும் வினைமுற்றை என்று கொள்க. எச்சங்களின் ஈறுகள் திணை,
பால், இடங்களைக் காட்டுவன அல்ல; ஆகலின், அவை யாவும்
இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவேயாம் என்று உணர்க.
நன்னூல் வினையியலில் உள்ள  பல்லோர் படர்க்கை முன்னிலை
தன்மையிற் செல்லா தாகும் செய்யுமென் முற்றே  என்னும்
சூத்திரத்தையும் ஈண்டு நோக்குக.