பக்கம் எண் :
 
சொல் அதிகாரம்105

       சில வினையெச்சங்களின் முடிபும், சிலசொற்கள் செய்யுளில்
              ஈறுதிரிதலும், எண்கள் தொகை பெறுதலும்

49.    சென்று முதலோடு சேருஞ் சினைவினையும்
      அன்றிஆ ஓவாகி ஆய்ஓய் - நின்றனவு
      மொய்குழலாய் முன்னிலைமுன் ஈ ஏயும் எண்தொகையும்
      எய்துங் கடப்பாட் டின.


     
எ - ன்: வினைச்சொல் ஒழிவும், எண்சொல் ஒழிவும் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

    
இ - ள்: பன்மைச் சினைவினை சினையோடு முடியாது முதலோடு
முடியவும் பெறும்; உயர்திணை முப்பாற்கும் ஈறான ஆனும், ஆளும்,
ஆரும், விரவுவினைக் கீறான ஆயும், இவை ஓவும் ஓயும் ஆய்வரப்
பெறும்;  முன்னிலை முன்னர் ஈகார ஏகாரங்கள் வினைப்படுத்துச் சொல்லும்
பொழுது இடைச்சொல்லாய் நிற்கவும் பெறும்; சொல்லப்பட்ட எண்கள்
எல்லாம் தொகை பெற்று முடியவும் பெறும். எ-று.

     அவை வருமாறு: கண் ணொந்தன, முலை வீங்கின எனற் பாலவை,
கண்ணொந்தாள், முலை வீங்கினாள் என்றுமாம்; மூக்கு நன்று, கொப்பூழ்
நன்று எனற்பாலவை, மூக்கு நல்லன், கொப்பூழ் நல்லன் என்றுமாம்.
என்னை?

             
 கண்ணுந் தோளும் முலையும் பிறவும்
             பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
             பன்மை கூறுங் கடப்பா டிலவே
             தம்வினைக் கியலு மெழுத்தலங் கடையே 

                                           
(தொல். கிளவி. 62)
என்பவாகலின்.


       உண்டான், உண்டாள், உண்டார், உண்டாய் என்பன உண்டோன், உண்டோள், உண்டோர், உண்டோய் என்றுமாம்; இவை செய்யுளிடத்தன்றி ஆகா என்றறிக. என்னை?

            
 பாலறி மரபி னம்மூ வீற்றும்
            ஆவோ வாகுஞ் செய்யு ளுள்ளே 
(தொல். வினை. 14)