இரண்டளவும் அடுக்கி வரப்பெறும்; இரட்டைச் சொற்கள் அவ்விரட்டுதலிற்
குறைத்துச் சொல்லப்படா எ-று.
அவை வருமாறு:
பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ
பாவீற் றிருந்த புலவிர்காள் பாடுகோ
ஞாயிற் றொளியான் மதிநிழற்றே தொண்டையர்தங்
கோவீற் றிருந்த குடை
இது நான்கு வரம்படுக்கின இசைநிறை.
இசைப்படு பொருளே நான்குவரம் பாகும்
(தொல். எச். 27)
என்பதாகலின்.
‘இதுவே, சிறுபுன்மாலை சிறுபுன்மாலை'
என இரண்டு வரம்படுக்கி வந்தது. கள்ளர் கள்ளர்
கள்ளர்! படை
படை படை! பாம்பு பாம்பு பாம்பு! தீத் தீத் தீ ! என மூன்று வரம்படுக்கி
வந்த விரைசொல்.
‘விரைசொல் லடுக்கே மூன்றுவரம் பாகும்'
(தொல். எச். 28)
என்பதாகலின்.
கள்ளர் கள்ளர், படை படை, பாம்பு பாம்பு,
தீத்தீ எனவும் வரும்.
அசைநிலையடுக்கும் ஒரு கட்டுரைத் தொடர்பினல்லது
வாரா;
கண்டீரே கண்டீரே, கேட்டீரே கேட்டீரே, நன்று நன்று. இவை இரண்டிற்
றாழ்ந்து வாரா.
‘அசைநிலை யடுக்கே இரண்டுவரம் பாகும்'
திடுதிடென்றது, மொடுமொடென்றது, சரசரென்றது,
கொறுகொறுத்தார், மொடுமொடுத்தார் இவை யிரட்டைக் கிளவி.
கொறுகொறுத்தா ரென்றொருவர் கூவுங்கா லுள்ளந்
துடிதுடித்துத் துள்ளி விழும்
எனச் செய்யுளிடத்து வந்தவாறு. பிறவும் அன்ன.
(12)
வினைமரபு முற்றும்
|