யாயினும் எச்சச்சொல்லாகாது முற்றுச்சொல்லாம். பாலும் திணையும் இடமும்
காலமும் தோன்றி நிற்றல் அம் முற்றுச்சொற்குச் சிறப்புடைத்து. என்னை?
பாலுந் திணையு மிடத்தொடு விளக்குங்
காலக் கிளவி முற்றென மொழிப
இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்ற
சிறப்புடை மரபி னம்முக் காலமுந்
தன்மை முன்னிலை படர்க்கை யென்னு
மம்மூ விடத்தான் வினையினுங் குறிப்பினு
மெய்ம்மை யானு மீரிரண் டாகு
மவ்வா றென்ப முற்றியன் மொழியே. (தொல். எச்ச. 31)
எவ்வயின் வினையு மவ்வயி னிலையும்
(தொல். எச்ச. 32)
அவைதாம்,
தத்தங் கிளவி யடுக்குந வரினு
மெத்திறத் தானும் பெயர்முடி பினவே
(தொல். எச்ச. 33)
என்பவாகலின்.
‘எய்தும்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், வினைச்சொல்
உம்மை
பெற்று வரவும் பெறும் என்றறிக.
அவை வருமாறு: அறுத்துங் குறைத்துஞ் சுகிர்ந்தும் வகிர்ந்தும்
என்றாற் போல்வன எனக்கொள்க. பிறவும் அன்ன.
(11)
சொற்கள் அடுக்கி வருமாறு
50. இசைநிறை நான்கு வரம்பாம் விரைசொல்
வசையிலா மூன்று வரம்பா - மசைநிலை
ஆய்ந்த வொருசொல் லடுக்கிரண்டாந் தாம்பிரியா
ஏந்திரட்டைச் சொற்கள் இரட்டு.
எ - ன்:
ஒரு சொல் அடுக்கி வருமிடம் இவை என்பது
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
ஒரு சொல் அடுக்கி வருமிடத்து இசை நிறை நான்களவும்
அடுக்கி வரப்பெறும்; விரைசொல் மூன்றளவும் அடுக்கி வரப்பெறும். உயர்ச்சி
சொல்லுதலாலே இவையிற்றின் இழிந்து வரவும் பெறும்; அசைநிலை
|