கண் வந்தது. ‘கொன்னூர் துஞ்சினும் யான்துஞ்
சலனே' என்பது
பெருமைக்கண் வந்தது. ‘கொன்முனை யிரவூர் போல' என்பது
அச்சத்தின்கண் வந்தது. ‘கொன்னே வழங்கான்' என்பது பயனின் மைக்கண்
வந்தது. இவை நான்கும் கொன்னையிடைச்சொல்.
‘பெற்றாங் கறிகதில் லம்மவிவ்வூரே' என்பது பெற்ற
பருவத் தறிக
என்றது. இது காலம்.
‘வார்ந்திலங்கு வையெயிற்றுச் சினமொழி
யரிவையைப் பெறுகதில் லம்ம யானே'
என்பது விழைவின் கண் வந்தது. ‘வருகதில் லம்மவெஞ் சேரி சேர' என்பது
வந்தால் இன்னது செய்வன் என்னும் பொருள்பட்டமையான் ஒழியிசை
யாயிற்று. இவை தில்லை யிடைச்சொல். பிறவும் அன்ன.
‘ஆண்டறி காலம்' என்று மிகுத்துச் சொல்லியவதனால்,
தில்லை
இடைச்சொல் விழைவின்கண் வரும்பொழுது தன்மையில் அன்றி வாராது
என்றறிக. என்னை?
விழைவின் றில்லை தன்னிடத் தியலும்
(தொல். இடை. 12)
என்றா ராகலின்.
(3)
என, என்று என்னும் இடைச்சொற்களும்
தத்தம்
குறிப்பிற் பொருள்படும் இடைச்சொற்களும்
54. வினைபெயரும் எண்ணும் இசைகுறிப்பும் பண்பும்
எனஎன் றிரண்டும் இயலும் - நிலையுங்கால்
மன்றவெனுஞ் சொற்றேற்றந் தஞ்சம் எளிமையாம்
என்றா எனாவிரண்டும் எண்.
எ - ன்:
என என்னும் இடைச்சொல்லும், என்று என்னும்
இடைச்சொல்லும் தததங் குறிப்பிற் பொருள் செய்யும் இடைச்சொல்லும்
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
வினையினும், பெயரினும், எண்ணினும், இசையினும்,
குறிப்பினும், பண்பினும் என என் இடைச்சொல்லும், என்று என்
இடைச்சொல்லும் வரும். மன்ற என்னும் சொல் தேற்றத்தைச் சொல்லும்.
தஞ்சம் என்னும் சொல் எளிமையைச் சொல்லும், என்றா, எனா என்னும்
இரண்டும் எண்ணைக் காட்டும் எ-று.
|