பக்கம் எண் :
 
சொல் அதிகாரம்111

         இனி, ஏகாரம் வருமாறு: அவனே கொண்டான் என்பது
தேற்றேகாரம். நீயே கொண்டாய் என்பது வினா ஏகாரம். நிலனே நீரே தீயே
என்பது எண்ணேகாரம். ‘தூற்றாதே தூரவிடல்' - தூற்று என்னும் பொருள்
பட்டமையான் எதிர்மறை ஏகாரம். ‘அடியான் மருட்டிய தாழ்குழலே' எனவும்,
‘ஏமாங்கதமென் றிசையாற்றிசை போயதுண்டே' எனவும் இவை ஈற்றசை
யேகாரம். தேற்றேகாரத்துள்ளே அடங்குமாதலாற் பிரிநிலை யேகாரம்

வேண்டிற்றிலர் என்றறிக. இவை ஏகார இடைச்சொல்.

     
 தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே
      யீற்றிசை யெனவைந் தேகா ரம்மே  
      (தொல். இடை. 9)

    
  மன், கொன், தில் என்னும் இடைச்சொற்கள்

53.    காண்டகுமன் னாக்கங் கழிவே யொழியிசைகொன்
      னாண்டறிகா லம்பெருமை யச்சமே - நீண்ட
      பயனின்மை தில்லை பருவம் விழைவு
      நயனி லொழியிசையு நாட்டு.

    
 எ - ன்: மன்னை யிடைச்சொல்லும், கொன்னையிடைச்சொல்லும்,
தில்லை யிடைச்சொல்லும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     
இ - ள்: மன் என்னும் இடைச்சொல் ஆக்கத்தினும், கழிவினும்,
ஒழியிசையினும் வரும்; கொன் என்னும் இடைச்சொல் காலத்தினும்,
பெருமையினும், அச்சத்தினும், பயனின்மையினும் வரும்; தில் என்னும்
இடைச்சொல் பருவத்தினும், விழைவினும், ஒழியிசையினும் வரும் எ-று.

      அவை வருமாறு: ‘பண்டுகாடுமன்' என்றது இன்று வயலாயிற்று

என்னும் பொருள்பட்டமையான் ஆக்கத்தின்கண் வந்தது. ‘ஈன விழிவினான்
வாழ்வேன்மன்' என்பது கழிவின்கண் வந்தது. ‘பண்டு கூரியதோர் வாண்மன்'
என்பது இன்று முறிந்தது என்றும், இந் நீர்மைத்தாயிற்று என்றும்

பொருள்பட்டமையான் ஒழியிசையாயிற்று; என இவை மன்னை இடைச்சொல்.

        ‘கொன்வரல் வாடை நன்றெனக் கொண்டேனோ? என்பது; 
கலியுங் காலம் அறிந்துவந்த வாடை என்றவாறு. இது காலத்தின்