இ - ள்:
சிறப்பினும், வினாவினும், தெரிநிலையினும்,
எண்ணினும்,
எதிர்மறையினும், ஒழியிசையினும், ஈற்றசையினும் ஓகாரம்
வரும்.
இவ்வோத்தின் முடியாதன முன்பு சொன்ன பகுதிகளிற் சார்த்தி
உணர்க
எ-று.
அவை வருமாறு:
ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண்
டாஅ மிதற்பட்டது.
இது சிறப்பு ஓகாரம். என்னை !
தெளிவி னேயுஞ் சிறப்பி னோவு
மளவி னெடுத்த விசைய வென்ப
(தொல். இடை. 13)
என்றாராகலின். அவனோ, வல்லனோ என்பது வினா ஓகாரம். நன்றோ
அன்று, தீதோ அன்று என்பது தெரிநிலை ஓகாரம்.
முத்தனென் கோமுதன் மூர்த்தியென் கோசக மூன்றினுக்கும்
அத்தனென் கோவென்னை ஆளியென் கோவடி யேனுடைய
சித்தனென் கோபத்தர் செல்வமென் கோவென்றுந் தேய்வொன்றில்லா
நித்தனென் கோபிண்டி நீழலின் கோவை நிரந்தரமே
(திருநூற்றந்தாதி, 31)
என்றார் அவிரோதி யாழ்வார். இஃது எண் ஓகாரம். யானோ கொண்டேன்
என்பது நீயன்றோ என்று பொருள்பட்டமையான் எதிர்மறை ஓகாரம்.
கொளலோ கொண்டான் என்பது கொண்டுய்யப் போகான் என்னும்
பொருள்பட்டமையான் ஒழியிசை ஓகாரம். ‘அப்பொரு ளிம்மையு மறுமையும்
பகையாவ தறியாயோ' இஃது ஈற்றசை ஓகாரம்.
புறனடையினான்
மியாஇக மோமதி இகுஞ்சின் னென்னு
மாவயி னாறு முன்னிலை யசைச்சொல்
என்பனவுங் கொள்க. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. அவற்றுட் சில
வருமாறு: கேண்மியா, சென்மியா என்பன மியா என்னும் இடைச்சொல்.
‘தண்டுறை யூரயாங் கண்டிக' என்பது இக என்னும் இடைச்சொல். ‘கண்டது
மொழிமோ?' என்பது மோ என்னும் இடைச்சொல். ‘சென்மதி பெரும'
என்பது மதி என்னும் இடைச்சொல். கண்டிகும் யாம் என்பது இகும் என்னும்
இடைச்
|