பக்கம் எண் :
 
சொல் அதிகாரம்115

சொல். ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகல்' என்பது சின் என்னும்
இடைச்சொல். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.                  
(5)

                  
இடைச்சொன் மரபு முற்றும்.
                          -------
                  எட்டாவது உரிச்சொல் மரபு
               உரிச்சொல்லின் பொது இலக்கணம்

56.    ஒண்பேர் வினையோடுந் தோன்றி உரிச்சொலிசை
      பண்பு குறிப்பாற் பரந்தியலும் - எண்சேர்
      பலசொல் லொருபொருட் கேற்றுமொரு சொற்றான்
      பலபொருட் கேற்றவும் பட்டு.

      என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ? வெனின்,
உரிச்சொன் மரபு என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத் தலைச்சூத்திரம்
என்னுதலிற்றோ? எனின், உரிச்சொற்குப் பொதுஇலக்கணம் உணர்த்துதல்
நுதலிற்று.

      
இ - ள்: உரிச்சொற்கள் பெயரொடும் வினையொடும் சேர்ந்து,
இசையும் குறிப்பும் பண்பும் பற்றிப் பல சொல் ஒருபொருட்கு உரித்தாயும்
ஒரு சொல் பல பொருட்கு உரித்தாயும் நடக்கும் எ-று.              
 (1)

                
உரிச்சொற்களின் பொருள் ஆமாறு

57.    கம்பலை சும்மை கலிஅழுங்க லார்ப்பரவம்
      நம்பொடு மேவு நசையாகும் - வம்பு
      நிலைஇன்மை பொன்மை நிறம்பசலை என்ப
      விலைநொடை வாளொளியாம் வேறு.

    
   எ - ன்:  பலசொல் ஒரு பொருண்மேல் வரும் உரிச்சொல்லும்,
பிறவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     
  இ - ள்: கம்பலை என்றும், சும்மை என்றும், கலி என்றும்,
அழுங்கல் என்றும், ஆர்ப்பு என்றும் இவை அரவப் பெயராம்; நம்பு, மேவு
இவை நசையாகும்; வம்பு நிலையின்மை யாகும்; பொன்மை என்பது
நிறமும், பசலையும் ஆகும்; நொடை விலையாம்; வாள் ஒளியாம் எ-று.