அவை வருமாறு: பொற்றொடி என்பது, பொன்னாற் செய்த தொடி
பொற்றொடி என்று கிடந்ததாயினும், இத்தொடியினையுடையாள் ஒருத்தியைக்
கருதலாலே வேற்றுமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை;
தகரஞாழல் என்பது உம்மைதொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை; திரிதாடி என்பது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை; வெள்ளாடை என்பது பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த
அன்மொழித்தொகை; வேய்த்தோள் என்பது உவமைத்தொகை புறத்துப்
பிறந்த அன்மொழித்தொகை.
இனித் ‘தோழியுங் கலுழ்மே' என்புழி, உகரங் கெட்டது.
வாம்புரவி என்பது உகரமும் மெய்யும் கெட்டன, அறிவாள் என்புழி
உகரமும் மெய்யும் ஒற்றும் கூடக் கெட்டன. என்னை?
அவற்றுள்,
செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகர
மவ்விட னறித லென்மனார் புலவர்
(தொல். வினை. 41)
என்றாராகலின்.
(3)
------------------------
* இதில் ‘கலுழ்மே' என்பது செய்யும் என்னும் வினைமுற்று; செய்யும்
பெயரெச்சம் அன்று. தொல்காப்பியத்துள் பின் காட்டப்படும் 41 ஆம்
கெடும்'
என்றே கூறப்பட்டது. அதன் விசேட உரையில்
சேனாவரையரும்
நச்சினார்க்கினியரும், செய்யு மென்னும்
பெயரெஞ்சு கிளவிக்கு ஈற்றுமிசை
யுகரம் மெய்யொடும் கெடும்.
எனவே செய்யும் என்னும் முற்றுச்சொற்கு
ஈற்றுமிசை உகரம்
மெய்யொடும் கெடும். மெய் ஒழித்தும் கெடும் என்பதாம்
என்று கூறினார். ஆதலின், இந்நூலின் உரையாசிரியர், ‘செய்யும்
என்னும்
பெயர் எச்சத்து இறுதியின் உகரம் கெடுதலும்' என்று
உரையிற் கூறியதும் அதற்குத் தோழியும் கலுழ்மே' என உதாரணம்
காட்டியதும் ஏற்புடையன
அல்ல என்க. நன்னூல் வினையியலில்
‘செய்யுமெ னெச்ச வீற்றுயிர்மெய்
சேறலும், செய்யுளு ளும்முந் தாகலு
முற்றேல், உயிருமுயிர்மெய்யு மேகலு
முளவே' என்னும்
சூத்திரத்தையும், அதன் உரையையும் உதாரணங்களையும்
ஈண்டு
நோக்குக. இந்நூலின் இச்சூத்திரத்தில் ‘செய்யுமெனும் பெயரெச்சத்
தீற்றின்மிசைச் சில்லுகரம் மெய்யொடும் போம் ஒற்றொடும் போம்
வெறு'
என்றதற்குச் செய்யும் என்னும் பெயர் எச்சங்கள் சிலவற்றின்
இறுதி்யில்
உள்ள உகரம் தான் ஊர்ந்துள்ள ஒற்றொடும் கெடும்:
அங்ஙனம் தான்
ஊர்ந்துள்ள ஒற்றொடும் கெடுதலே யன்றி ஈற்றில்
உள்ள மகரஒற்றொடும்
கெடும் என்றவாறு எனப் பொருள் கூறிப்
பின், ‘வேறு' என்று
|