பக்கம் எண் :
 
சொல் அதிகாரம்125

       அவை வருமாறு: வெள்ளோக்கத்தார் என்றால்
வெள்ளையோக்கத்தார் என்றவாறு அன்று; கிளையுடையர் என்றவாறு.
செஞ்செவியர் என்றாற் சிவந்த செவியர் என்றவாறு அன்று; பொன் பூண்ட
செவியர் என்றவாறு. செங்கை என்றால் உபகரித்த கை என்றும், கருங்கை
என்றாற் கொன்று வாழுங் கை என்றும் சொல்லுதல்; இவை சொற்குறிப்பால்
அறிய வருவன.

       கூழ் புள்ளென்றது, வெயிற் சுள்ளென்றது, நீர் தண்என்றது என்பன
என்னாதவற்றை என்றனபோற் சொல்லுதல்.

      வழி வந்து கிடக்கும், மலைவந்து கிடக்கும் என்பன
செல்லாதனவற்றைச் சென்றனபோற் சொல்லுதல்.

      திண்ணை மெழுகிற்று, சோறட்டது, கறி பொறித்தது என்பன
செய்யப்படும் பொருளைச் செய்ததுபோற் சொல்லுதல்.

      இவை வழக்கிற்கு ஆமென்றீர்; ‘கருங்கைக் கானவன் களிற்று நிறத்
தழுத்தலின்' என்றும், ‘நள்ளென் றன்றே யாமம்' என்றும் இவை முதலாயின
எல்லாம் செய்யுளுள்ளும் வந்தனவாலோ? எனின், அவை வழக்குச்
சொல்லாய்ச் செய்யுளுள் வந்தன எனக்கொள்க.

      ‘எய்தப்படும்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், ஒருபாற்கு
உரித்தாகச் சொல்லப்பட்டனவேயாயினும், அவை மற்றைப் பால்களுக்கும்

உரியவாய் வருவனவும் உள என்றவாறு; என்னை?


        
  ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும்
          வருவகை தாமே வழக்கென மொழிய 

                                         
(தொல். பொருளி. 28)
என்றாராகலின்.

        அவை வருமாறு: நஞ்சுண்டான் சாம் என்றால், நஞ்சுண்டாள் சாம்,
நஞ்சுண்டார் சாவர், நஞ்சுண்டது சாம், நஞ்சுண்டன சாம் என்று
கண்டுகொள்க.

        
 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
         எல்லா உயிருந் தொழும் 


இதனுள் மறுத்தானை என்றதாயினும் ஐம்பான் மேலும் ஒட்டிக் கொள்க.
பிறவும் அன்ன.                                             
(6)