சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு
நிலையென்ப
கானக நாடன் சுனை.
என்பதனைச் சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து
எனப் பொருள் கொண்டமையாற் சுண்ண மொழிமாற்று. நிரனிறை என்பது
பலவகையாம்; அவற்றுட் சில வருமாறு:
கொடி
குவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி
மதிபவள முத்தமுகஞ்
செவ்வாய் - முறுவல்
பிடிபிணை மஞ்ஞை
நடைநோக்கஞ் சாயல்
வடிவினளே வஞ்சி
மகள்
என்பது பெயர் நிரனிறை.
காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப
போதுசேர் தார்மார்ப
போர்ச்செழிய - நீதியான்
மண்ணமிர்த மங்கையர்தோண்
மாற்றாரை யேற்றார்க்கு
நுண்ணிய வாய
பொருள்
இது வினைப்பெயர் நிரனிறை.
ஆடவர்க ளெவ்வா றகன்றொழிவார் வெஃகாவும்
பாடகமு
மூரகமும் பஞ்சரமா - நீடியமால்
நின்றா
னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ
மன்றார்
கலிக்கச்சி மாண்பு.
இது பெயர் வினை யெதிர் நிரனிறை.
குன்ற வெண்மண லேறி நின்றுநின்
றின்னங்
காண்கம் வம்மோ தோழி
களிறுங்
கந்தும் போல நளிகடற்
கூம்புங்
கலனுந் தோன்றுந்
தொன்னல
மறந்தோர் துறைகெழு நாடே
இது பெயரொடு பெயரெதிர் நிரனிறை.
கூற்றுவனை மன்மதனை யரக்கர் கோவைக்
கூனிலவைக் குஞ்சரத்தை யிஞ்சி மூன்றை
யேற்றுலகின்
புறவுருவ மாளத் தோள்க
ளிறவெறிப்ப விமையப்பெண் வெருவவேவக்
காற்றொழிலா னயனத்தால் விரலாற் கற்றைக்
கதிர்முடியாற் கரதலத்தாற் கணையாற் பின்னும்
|